×

மதுரையில் தபால் ஏற்றுமதி சேவை மையம் துவக்கம்

மதுரை, ஆக. 12: தபால் துறையில் மின்வர்த்தகர்கள் பயன்பெறும் வகையில் டிகேஎன் (இந்திய தபால் அலுவலக ஏற்றுமதி மையம்) என்ற புதிய சேவை துவங்கப்பட்டுள்ளது. இதனால் மின்வர்த்தகர்கள், டிகேஎன் இணையதளத்தில் தங்களது ஏற்றுமதி, இறக்குமதி குறியீடு (ஐஇசி) கொண்டு பதிவு செய்து பயனர் அடையாளம் மற்றும் ரகசிய குறியீடு பெற்று கொள்ளலாம். இந்த பயனர் அடையாளம் கொண்டு டிகேஎன் இணையதளத்தில் மின்வர்த்தகர்கள் தங்கள் வீடு மற்றும் அலுவலகத்தில் இருந்தவாறே பதிவு செய்து அருகிலுள்ள தபால் அலுவலக ஏற்றுமதி மையத்தில் பணம் செலுத்தி வெளிநாட்டுக்கு தபால்களை அனுப்பலாம். டிகேஎன் மூலம் அனுப்பப்படும் பார்சல்களுக்கு உச்சபட்ச எண்ணிக்கை, பண வரம்பு கிடையாது. டிஜிட்டல் முறையில் சுங்க அனுமதி பெறலாம். காப்பீடு வசதி உண்டு. டிகேஎன் இணையதளத்திலேயே புக்கிங் முதல் டெலிவரி வரையிலான டிராகிங் செய்யும் வசதி உள்ளது. மேலும் டிகேஎன் இணையதளம் மூலமாக பிபிஇ தாக்கல் செய்து கொள்ளலாம். ஒப்பந்த வாடிக்கையாளர்களுக்கு சலுகை தள்ளுபடி வசதி உண்டு. இந்த புதிய சேவை குறித்த கூடுதல் விபரங்களுக்கு மதுரை தல்லாகுளம் தலைமை தபால் துறை அலுவலகத்தை வாடிக்கையாளர்கள் அணுகலாம் என மதுரை தபால் கோட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மதுரையில் தபால் ஏற்றுமதி சேவை மையம் துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Maduram ,Madurai, Ga. 12 ,DKN ,Indian Post Office Export Centre ,Postal Export Service Center ,Dinakaran ,
× RELATED மலையாளத்தில் அறிமுகமாகிறார் அர்ஜுன் தாஸ்