×

வீட்டிற்குள் புகுந்த கொம்பேறி மூக்கன்

குஜிலியம்பாறை, ஆக.12: குஜிலியம்பாறையை சேர்ந்தவர் ஈஸ்வரன்(55). பஸ் ஸ்டாண்டு மெயின் ரோட்டில் இவருக்கு சொந்தமான கட்டிடத்தில் பழக்கடை வைத்துள்ளார். கடைக்கு பின்புறமாக சொந்தமாக வீடு உள்ளது. இவரது மனைவி ஆபரணம்(50) நேற்று காலை வீட்டில் இருந்த போது, சமையலறை உள்ளே பாம்பு ஒன்று செல்வதை பார்த்தார். இது குறித்து குஜிலியம்பாறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன் தலைமையில் தீயணைப்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் சமையலறையில் பாம்பு இருப்பதை கண்டு உயிருடன் பிடித்தனர். பிடிபட்ட பாம்பு 5 அடி நீளமுள்ள கொம்பேறிமூக்கன் என்பது தெரியவந்தது. உயிருடன் பிடிபட்ட பாம்பு வனப்பகுதியில் பாதுகாப்பாக விடப்பட்டது.

The post வீட்டிற்குள் புகுந்த கொம்பேறி மூக்கன் appeared first on Dinakaran.

Tags : Kujiliamparai ,Iswaran ,Road ,Komberi Mookan ,Dinakaran ,
× RELATED காவிரி உரிமையை மீட்க போராட்டம் கட்சி...