×
Saravana Stores

இரும்பு ஆலையில் சிலிண்டர் வெடித்து தொழிலாளி பலி

அவிநாசி: திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே சின்னக்கானூரில் தனியார் இரும்பு உருக்காலை செயல்பட்டு வருகிறது. டென்மார்க்கில் உள்ள இளங்கோவன் என்பவர் நடத்தி வருகின்றார். இந்த ஆலையில் 30 தமிழர்கள், 180 வட மாநில தொழிலாளர்கள் உள்பட 300க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், நேற்று வழக்கம் போல நிறுவனம் இயங்க தொடங்கியது. காலை 10.30 மணியளவில், திடீரென நிறுவனத்திற்குள் இருந்த இரும்பு உருக்கு ஆலையில் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில், உத்தர பிரதேச மாநிலம் சித்திவிலேஜ் பகுதியை சேர்ந்த ராம்விலாஸ் மகன் ராஜேஷ் (29) என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானார். மேலும், வடமாநில தொழிலாளிகள் தஷ்கர்த் ஜாஹோன் (20), பிரதீப்(22) ஆகிய இருவர் படுகாயமடைந்தனர்.

The post இரும்பு ஆலையில் சிலிண்டர் வெடித்து தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Tags : Avinasi ,Tiruppur district ,Chinnakanur ,Ilangovan ,Denmark ,Dinakaran ,
× RELATED நல்லாற்று நீரோடையில் துர்வாரும் பணிகள் தீவிரம்