×

திருச்சுழி அருகே வடக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம்

 

திருச்சுழி, ஆக.12: திருச்சுழி அருகே மல்லாங்கிணறில் விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. திருச்சுழி அருகே உள்ள மல்லாங்கிணறில் திமுக வடக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்தங்கம் தென்னரசு பேசியதாவது: வாக்குச்சாவடி பாக முகவர்கள் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ராமநாதபுரத்தில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் அயராது பாடுபட வேண்டும்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை அனைத்து திமுக சார்பு அணிகளும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்றார். இந்த கூட்டத்தில் விருதுநகர் மாநில வர்த்தக அணி துணைச்செயலாளர் வனராஜா, மாவட்ட அவைத்தலைவர் தங்கராஜ், ஒன்றிய தலைவர் பொன்னுத்தம்பி, ஒன்றிய செயலாளர்கள் காரியாபட்டி மேற்கு ஒன்றியம் கண்ணன், நரிக்குடி பா.ப.போஸ் தேவர், நரிக்குடி கண்ணன், திருச்சுழி சந்தனப்பாண்டியன், மாவட்ட கவுன்சிலர் கமலி பாரதி, பொதுக்குழு உறுப்பினர்கள் சந்திரன், முன்னாள் ஒன்றிய சேர்மன் ஜெயராஜ்,

மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் இராசமாணிக்கம், சிறுபான்மையினர் மாவட்ட அமைப்பாளர் செல்லத்துரை, வர்த்தக அணி துணை அமைப்பாளர் ரமேஷ், மாவட்ட இலக்கிய அணி பிச்சைநாதன், மாவட்ட துணை அமைப்பாளர் மைலி முத்துச்சாமி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் லோகநாதன், ஒன்றிய துணைச்சேர்மன் இராஜேந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

The post திருச்சுழி அருகே வடக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : DMK ,North District ,Thiruchuzhi ,Virudhunagar ,Mallanginar ,North ,District ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து திமுக ஆலோசனை கூட்டம்