×

இன்று 4வது டி20 வெஸ்ட் இண்டீசுடன் இந்தியா மோதல்

புளோரிடா: வெஸ்ட் இண்டீஸ் – இந்தியா மோதும் 4வது டி20 போட்டி, அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் லாடர்ஹில் நகரில் இந்திய நேரப்படி இன்று இரவு 8.00 மணிக்கு தொடங்குகிறது.
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி டெஸ்ட், ஒருநாள் போட்டித் தொடர்களை தொடர்ந்து, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த 3 ஆட்டங்களில் வெஸ்ட் இண்டீஸ் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த 3 ஆட்டங்களும் வெஸ்ட் இண்டீசில் நடந்தன. எஞ்சிய 2 ஆட்டங்கள் அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் லாடர்ஹில் நகரில் நடைபெற உள்ளது. ஏற்கனவே இந்த 2 அணிகளும் கடந்த ஆண்டு இங்கு 2 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.

4வது டி20ல் இந்தியா வென்றால் தொடரை 2-2 என சமநிலைக்கு கொண்டு வருவதுடன், தொடரை வெல்லும் வாய்ப்பையும் தக்கவைத்துக் கொள்ள முடியும். அதே சமயம், இந்த ஆட்டத்தில் வென்றாலே வெஸ்ட் இண்டீஸ் 3-1 என தொடரை கைப்பற்றிவிடும். அதனால் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி மீண்டும் ஒரு சவாலான ஆட்டத்தை சந்திக்கிறது. 3வது போட்டியில் சூரியகுமார், திலக் வர்மா அதிரடி ஆட்டம் இந்திய அணிக்கு வெற்றியை வசப்படுத்த உதவியது. அதே உற்சாகத்துடன் இந்தியா ஒருங்கிணைந்து விளையாடினால் வெஸ்ட் இண்டீசை மீண்டும் வீழ்த்தலாம். தொடரை வெல்ல வெஸ்ட் இண்டீசும், சமநிலை ஏற்படுத்த இந்தியாவும் வரிந்துகட்டுவதால், ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.

The post இன்று 4வது டி20 வெஸ்ட் இண்டீசுடன் இந்தியா மோதல் appeared first on Dinakaran.

Tags : India ,West Indies ,T20I ,Florida ,Lauderhill, Florida ,
× RELATED ரோஹித் ஷர்மா தலைமையில் டி20 உலக...