×

ஆயுஷ்மான் பாரத் மோசடி குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது: ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல்

புதுடெல்லி: பிரதமரின் மக்கள் சுகாதார திட்டத்தின்கீழ் ஆயுஷ்மான் பாரத் திட்டம் ஒன்றிய சுகாதாரத்துறையால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஊழல் நடந்துள்ளதாக ஒன்றிய தலைமை கணக்கு தணிக்கைத்துறை அறிக்கை வௌியிட்டிருந்தது . இதுகுறித்து மக்களவையில் பதிலளித்த ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, “ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் ரூ.287 கோடிக்கு 1.6 லட்சம் பயனாளிகள் உரிமை கோரல்கள் தொடர்பாக ஆகஸ்ட் 5ம் தேதி வரை மாநில சுகாதார நிறுவனங்களால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வழிகாட்டுதல்களை மீறிய 201 மருத்துவமனைகள் நீக்கப்பட்டுள்ளன. ரூ.20.71 கோடி அபராம் விதிக்கப்பட்டு ரூ.9.5 கோடி வசூலிக்கப்பட்டுள்ளன. திட்டத்தில் நடக்கும் மோசடி முறைகேடுகளை கண்டறிவது. தடுப்பது ஆகியவற்றுக்காக தேசிய மோசடி தடுப்பு பிரிவு அமைக்கப்பட்டுள்ளது” இவ்வாறு தெரிவித்தார்.

The post ஆயுஷ்மான் பாரத் மோசடி குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது: ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல் appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Mansukh Mandaviya ,New Delhi ,Union Health Department ,Dinakaran ,
× RELATED நக்சல், தீவிரவாதத்தை ஒழிக்க மோடிதான்...