×

தமிழ்நாட்டிற்கு 38 டி.எம்.சி தண்ணீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

டெல்லி: தமிழ்நாட்டுக்கு 38 டிஎம்சி தண்ணீரை திறக்க கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் தலைமையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டம் இன்று தொடங்கியது. காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் கூட்டம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு சார்பில் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரணமணியம் பங்கேற்றுள்ளார். இந்த கூட்டத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழைபெய்து வரும் நிலையில், நீர்வரத்து எவ்வாறு உள்ளது, கர்நாடக அணைகளில் நீர்வரத்து எவ்வாறுஉள்ளது, நீர் வெளியேற்றம், நீர் இருப்பு ஆகியவை குறித்து விவாதிக்கபட்டது.

அப்போது கடந்த ஜுன் மாதம் கர்நாடக அரசு காவிரியில், 26.3 டிஎம்சி தண்ணீர் தமிழ்நாடிற்கு திறந்து விடவேண்டும், ஆனால் 3.78 டிஎம்சி தண்ணீர் மட்டுமே கர்நாடக அரசு திறந்து விட்டுள்ளது. எஞ்சிய 22.54 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு உடனடியாக திறந்து விட உத்தரவிட வேண்டும். அதற்காக காவிரி மேலாண்மை ஆணையத்தை உடனடியாக கூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்கள் ஆனால் கோரிக்கையை ஏற்காததால் தமிழ்நாடு அதிகாரிகள் வெளிநடப்பு செய்தனர். இதனையடுத்து சுமார் மூன்றரை மணி நேரம் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு 38 டி.எம்.சி தண்ணீரை திறந்துவிடுமாறு கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டது.

The post தமிழ்நாட்டிற்கு 38 டி.எம்.சி தண்ணீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,MM ,Caviri Management Commission ,Karnataka ,Delhi ,Cavir Management Commission ,
× RELATED நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்கள்...