×

இங்கிலாந்து மன்னர் சார்லசின் முடிசூட்டை குறிக்கும் சிறப்பு நாணயம் வெளியீடு

லண்டன்: இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் உடல் நலக்குறைவால் காலமானார். இதையடுத்து அவரது மூத்த மகனான இளவரசர் சார்லஸ் மன்னராக அரியணை ஏறினார். அவர் 3ம் சார்லஸ் என அழைக்கப்படுகிறார். மன்னர் சார்லசின் அதிகாரப்பூர்வ முடிசூட்டு விழா கடந்த மே 6ம் தேதி லண்டனில் வெகு விமரிசையாக நடந்தது. இந்நிலையில் மன்னர் சார்லசின் முடிசூட்டை குறிக்கும் வகையில் சிறப்பு நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. மன்னரின் உருவம் பொறிக்கப்பட்ட 50 பென்ஸ் நாணயத்தை, இங்கிலாந்து நாணயங்களை அதிகாரப்பூர்வமாக தயாரிக்கும் ‘தி ராயல் மின்ட்’ நிறுவனம் நேற்று வெளியிட்டது.

இந்த நாணயம் உடனடியாக புழக்கத்துக்கு வரும் என ‘தி ராயல் மின்ட்’ நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் அந்த நிறுவனம் கூறுகையில், ‘நாடு முழுவதும் உள்ள தபால் அலுவலகம் மற்றும் வங்கி கிளைகளில் 50 பென்ஸ் சிறப்பு நாணயங்களை பெறலாம். இந்த நாணயம் மன்னரின் அதிகாரபூர்வ உருவ படம் பொறித்த புழக்கத்தில் வந்துள்ள 2வது நாணயமாகும். கடந்தாண்டு டிசம்பரில் 2ம் எலிசபெத் ராணியில் இருந்து 3ம் சார்லஸ் மன்னராக வரலாற்று மாற்றத்தை குறிக்கும் வகையில் முதல் நாணயம் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post இங்கிலாந்து மன்னர் சார்லசின் முடிசூட்டை குறிக்கும் சிறப்பு நாணயம் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : King Charles ,England ,London ,Queen Elizabeth II of ,
× RELATED இந்தியருக்கு 16 ஆண்டு சிறை