×

டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் இருந்து தமிழ்நாடு அதிகாரிகள் வெளிநடப்பு

டெல்லி: டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் இருந்து தமிழ்நாடு அதிகாரிகள் வெளிநடப்பு செய்துள்ளனர். தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய 38 டி.எம்.சி. நீரை உடனே திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு கோரியிருந்தது.தமிழ்நாடு அரசு கோரிக்கையை ஏற்காததால் கூட்டத்தில் இருந்து வெளியேறியதாக நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் பேட்டி அளித்துள்ளார். காவிரியில் தண்ணீர் வராததால் டெல்டாவில் பயிர்கள் கருகும் தருவாயில் உள்ளன. 5 லட்சம் ஏக்கர் குறுவை சம்பா பயிர்களை காப்பாற்ற உடனடியாக கர்நாடகம் நீர் திறந்து விட வலியுறுத்தப்பட உள்ளது.

டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் தலைமையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டம் இன்று தொடங்கியது. காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் கூட்டம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு சார்பில் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரணமணியம் பங்கேற்றுள்ளார்.

காவிரியில் உரிய நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வலியறுத்தி உள்ளது. மேகதாது விவகாரம் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்தும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் விவாதிக்க வாய்ப்பு உள்ளது என்று தகவல் தெரிவித்துள்ளனர். கடந்த ஜூன் 1-ம் தேதி முதல் ஆக.10-ம் தேதி வரை 53 டிஎம்சி தர வேண்டிய கர்நாடகம் தற்போது வரை 15 டிஎம்சி நீர் மட்டுமே வழங்கியுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டம் தலைநகர் டெல்லியில் நடைபெற்றுவருகிறது.

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் நீர்வளத்துறை செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழைபெய்து வரும் நிலையில், நீர்வரத்து எவ்வாறு உள்ளது, கர்நாடக அணைகளில் நீர்வரத்து எவ்வாறுஉள்ளது, நீர் வெளியேற்றம், நீர் இருப்பு ஆகியவை குறித்து விவாதிக்கபட்டது.

தொடர்ந்து கடந்த ஜுன் மாதம் கர்நாடக அரசு காவிரியில், 26.3 டிஎம்சி தண்ணீர் தமிழ்நாடிற்கு திறந்து விடவேண்டும், ஆனால் 3.78 டிஎம்சி தண்ணீர் மட்டுமே கர்நாடக அரசு திறந்து விட்டுள்ளது. எஞ்சிய 22.54 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு உடனடியாக திறந்து விட உத்தரவிட வேண்டும். அதற்காக காவிரி மேலாண்மை ஆணையத்தை உடனடியாக கூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்கள் ஆனால் கோரிக்கையை ஏற்காததால் தமிழ்நாடு அதிகாரிகள் வெளிநடப்பு செய்தனர்.

The post டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் இருந்து தமிழ்நாடு அதிகாரிகள் வெளிநடப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil ,Nadu ,Caviri Management Commission ,Delhi ,PTI ,Tamil Nadu ,
× RELATED சுய சான்றிதழ் திட்டத்தின் கீழ் கட்டிட...