×

கல்லறை திருநாள் அனுசரிப்பு

ஊட்டி : நீலகிரியில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் சார்பில் மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. உலகம் முழுவதும் நவம்பர் மாதம் 2ம் தேதி கத்தோலிக்க கிறிஸ்தவ மக்களால் கல்லறை திருநாள் அனுசரிக்கப்படுகிறது. இறந்து போன தங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மற்றும் மூதாதையர்கள் நினைவாக அவர்களது கல்லரைகளுக்கு சென்று, அங்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்துவது வழக்கம். நேற்று கல்லறை திருநாளை முன்னிட்டு ஊட்டியில் உள்ள கல்லறை தோட்டத்தில் உள்ள அனைத்து கல்லறைகளையும், உறவினர்கள் சுத்தம் செய்து மாலை அணிவித்து, மெழுவர்த்தி மற்றும் பத்திகள் ஏற்றி வைத்தனர்.  தொடர்ந்து கல்லறையில் சிறப்பு பிரார்த்தனை நடத்தினர். நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் கல்லறைகளை சுத்தம் செய்து, அதனை அலங்கரித்து பூஜை செய்ததால், ஊட்டி காந்தல் கல்லறை தோட்டம், குருசடி கல்லறை தோட்டம் ஆகியவைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. தொடர்ந்து நேற்று மாலை கல்லறை தோட்டத்தில் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சியும் நடந்தது….

The post கல்லறை திருநாள் அனுசரிப்பு appeared first on Dinakaran.

Tags : Day ,Catholic Christians ,Nilgiris ,Cemetery Trinada ,Dinakaran ,
× RELATED இளம் தலைமுறையினராகிய மாணவர்கள்...