×

மணிப்பூரில் மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் போது நாடாளுமன்றத்தில் அமர்ந்து பிரதமர் சிரிப்பது வெட்கக்கேடானது: ராகுல்காந்தி ஆவேசம்

சென்னை: மணிப்பூரில் மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் போது நாடாளுமன்றத்தில் அமர்ந்து பிரதமர் சிரிப்பது வெட்கக்கேடானது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி ஆவேசமாக தெரிவித்துள்ளார். ஒரு பிரதமர் இவ்வளவு மோசமாக நாடாளுமன்றத்தில் நடந்து கொண்டதை பார்த்ததேயில்லை. மாதக் கணக்கில் மணிப்பூர் எரிந்து கொண்டு இருக்கிறது; மக்கள் கொல்லப்படுகிறார்கள். மணிப்பூருக்கு செல்லாமலேயே அதைப்பற்றி பேசுவது எப்படி? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். ஒன்றிய அரசு நினைத்திருந்தால் மணிப்பூர் கலவரத்தை நிறுத்தி இருக்கலாம்; ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. பாரத மாதா என பேசியதை முதல்முறையாக அவைக் குறிப்பில் இருந்து நீக்கியுள்ளனர் என ராகுல் காந்தி குறிப்பிட்டார்.

The post மணிப்பூரில் மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் போது நாடாளுமன்றத்தில் அமர்ந்து பிரதமர் சிரிப்பது வெட்கக்கேடானது: ராகுல்காந்தி ஆவேசம் appeared first on Dinakaran.

Tags : Manipur ,Raakulkandhi ,Chennai ,Congress ,GP ,Rakulkandi ,Parliament ,Rakulkandhi ,
× RELATED மணிப்பூரில் எதிர்க்கட்சித் தலைவர்...