×

17வது நாளாக என்எல்சி ஊழியர்கள் போராட்டம்

நெய்வேலி: நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனம் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இந்நிலையில் என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த மாதம் ஜூலை 26ம் தேதி முதல் பணி நிரந்தரம் செய்யும் வரை மாத ஊதியம் ரூ. 50 ஆயிரம் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

என்எல்சி நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று மாலை அண்ணா திடலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்கள் கண்களில், வாய்களில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே இன்று 17வது நாளாக அண்ணா திடலில் என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post 17வது நாளாக என்எல்சி ஊழியர்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : NLC ,Neyveli ,NLC India ,Central Govt ,Jiva ,Dinakaran ,
× RELATED நெய்வேலி என்எல்சி 2-வது சுரங்கத்தில்...