×

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: ஜப்பானை சாய்த்து பைனலுக்கு நுழையுமா இந்தியா?

சென்னை: இந்தியா உள்பட 6 அணிகள் பங்கேற்றுள்ள 7வது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் சுற்று முடிவில் முறையே முதல் 4 இடங்கள் பிடித்த இந்தியா, மலேசியா, தென் கொரியா, ஜப்பான் ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு தகுதிபெற்றன. பாகிஸ்தான், சீனா வாய்ப்பை இழந்தன. இன்று அரையிறுதி போட்டிகள் நடக்கிறது. மாலை 6 மணிக்கு நடைபெறும் முதல் அரை இறுதியில் மலேசியா-நடப்பு சாம்பியன் தென் கொரியா மோதுகின்றன.

இரவு 8.30 மணிக்கு நடைபெறும் 2வது அரை இறுதியில் இந்தியா-ஜப்பான் மோதுகின்றன. நடப்பு சீசனில் அதிக கோல் (7)அடித்துள்ள ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்தியா லீக் சுற்றில் தோல்வியே சந்திக்கவில்லை. ஜப்பானுக்கு எதிராக டிரா செய்த நிலையில் இன்று அந்த அணியை வீழ்த்தி பைனலுக்குள் நுழையும் உத்வேகத்தில் உள்ளது. இரு அணிகளும் இதுவரை 93 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் 82ல் இந்தியாவும, 6ல் ஜப்பானும் வென்றுள்ளன. 5 போட்டி டிராவில் முடிந்துள்ளது. முன்னதாக மாலை 3.30 மணிக்கு நடைபெறும் 5வது இடத்துக்கான போட்டியில் பாகிஸ்தான்-சீனா மோதுகின்றன.

The post ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: ஜப்பானை சாய்த்து பைனலுக்கு நுழையுமா இந்தியா? appeared first on Dinakaran.

Tags : Asian Champions Trophy Hockey ,India ,Japan ,Chennai ,Chennai Egmore ,Dinakaran ,
× RELATED ஓட்டுப்போட ஜப்பானில் இருந்து பறந்து வந்த சேலம் வாக்காளர்