×

குட்டிக் குட்டி வீட்டுக் குறிப்புகள்!

வெண் பொங்கல் மீதமாகிவிட்டால் கடுகு, உளுந்து தாளித்து நறுக்கிய வெங்காயம், தக்காளி, சாம்பார் பொடி ஆகிய வற்றை வதக்கி, சிறிது புளிக்கரைசலை ஊற்றி கொதிக்கவிடுங்கள். அதில்3 payaniமீதமாகி விட்ட பொங்கலைக் கொட்டி, கிளறினால் சாம்பார் சாதம் தயார்.

மாவுடன் வேகவைத்து தோல் நீக்கிய உருளைக்கிழங்கையும் சேர்த்து அரைத்து போண்டா, வடை செய்தால் சூப்பராக இருக்கும்.வெங்காயம் நறுக்கும்போதுசூயிங்கம் சாப்பிட்டால் கண்களில் தண்ணீர் வராது. அரிப்பும் ஏற்படாது.

உப்புக் கரைத்த தண்ணீரில் தக்காளியைப் போட்டு வைத்தால் அழுகாமல் இருக்கும்.

அசைவ வாடை பாத்திரங்களில் இருந்து அகல, புளியைத் தடவி, சிறிது நேரம் கழித்து கிளீனிங்பவுடரால் சுத்தப் படுத்தினால் பளிச்சென்றாகிவிடும்.

சுத்தமான மண்பாண்டத்தில் பாலை ஊற்றி வைத்தால் இரண்டு நாட்கள் வரை பால் கெட்டுப்போகாமல் இருக்கும்.

நூலை சோப்பில் ஒரு தேய் தேய்த்து விட்டு பிறகு ஊசியில் கோர்த்தால் எளிதில் கோர்க்க முடியும்.

சர்க்கரைப் பொங்கலில் போட திராட்சை, முந்திரி இல்லாவிட்டால் தேங்காயை நறுக்கி நெய்யில் வறுத்து பொங்கலில் சேர்த்துவிட்டால் சுவை அதிகரிக்கும்.

காபி மேக்கரைக் கழுவும் போது நீருடன் எலுமிச்சைச்சாறு அல்லது வினிகர் விட்டு ஸ்விட்ச்சை ஆன் செய்யவும். சுத்தமாகிவிடும்.
– எம்.ஏ.நிவேதா

The post குட்டிக் குட்டி வீட்டுக் குறிப்புகள்! appeared first on Dinakaran.

Tags : tips ,
× RELATED கோடையில் மின்சாரத்தை மிச்சம் செய்து...