×

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் இன்று கூடுகிறது: தமிழ்நாடு, புதுவை, கர்நாடகா, கேரளா அதிகாரிகள் பங்கேற்கின்றனர்

டெல்லி: தமிழ்நாட்டிற்கு காவிரியில் உரிய தண்ணீர் திறந்து விடாத நிலையில் டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. காவிரி நதிநீர் பங்கீட்டில் உள்ள பிரச்சனைகளை களைவதற்காக உச்சநீதிமன்ற உத்தரவுபடி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையத்தின் 22வது கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறவுள்ளது.

ஆணையத்தலைவர் எஸ்.கே ஹல்தார் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகம், கேரளாவை சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொள்கிறார்கள். அண்மையில் தமிழ்நாடு அரசின் அழுத்தத்தால் காவிரியிலிருந்து தண்ணீர் திறந்து விட ஒப்புக்கொண்ட நிலையில் அதற்கிடையே மழையும் பெய்ததால் அம்மாநில அணைகளிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. ஆனாலும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி தமிழ் நாட்டிற்கு வரவேண்டிய தண்ணீர் முழுமையாக திறந்துவிடப்படாததால் இன்றைய காவிரி மேலாண்மை கூட்டத்தில் அது குறித்து தமிழ்நாட்டு அதிகாரிகள் பேசவுள்ளனர்.

The post காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் இன்று கூடுகிறது: தமிழ்நாடு, புதுவை, கர்நாடகா, கேரளா அதிகாரிகள் பங்கேற்கின்றனர் appeared first on Dinakaran.

Tags : Caviri Management Commission ,Delhi ,Tamil Nadu ,Puduva ,Karnataka ,Kerala ,Kaviri ,Cavir Management Commission ,New Delhi ,Karnataka, ,
× RELATED பணம் சுருட்டல், கூலி ஆட்களை வைத்து...