×

பெண்களுக்கான 9-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர்: நெதர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது ஸ்பெயின் அணி

பிரிஸ்பேன்: மகளிர் உலகக்கோப்பை கால்பந்து நெதர்லாந்தை வீழ்த்தி ஸ்பெயின் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. பெண்களுக்கான 9-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்ட 32 அணிகளில் இருந்து 16 அணிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றான 2-வது சுற்றுக்கு முன்னேறின.

2-வது சுற்று ஆட்டங்கள் கடந்த 5ஆம் தேதி தொடங்கி நிறைவடைந்தன. இதன் முடிவில் ஸ்பெயின், ஜப்பான், நெதர்லாந்து, சுவீடன், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கொலம்பியா மற்றும் பிரான்ஸ் ஆகிய 8 அணிகள் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இன்று காலை நடைபெற்ற முதல் காலிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின்- நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இரண்டு அணி வீராங்கனைகளும் தங்களது ஆட்டத்தை சிறப்பாக வெளிப்படுத்தினர். முதல் 15 நிமிடங்களில் இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது கூடுதல் நேரத்தில் ஸ்பெயின் வீராங்கனை சல்மா செலிஸ்டெ பராலுயெலோ அயுங்கோனா கோல் அடித்தார். இதனால் ஸ்பெயின் 2-1 என முன்னிலைப் பெற்றது. அதன்பின் ஆட்டம் முடியும் வரை நெதர்லாந்து வீராங்கனைகளால் கோல் அடிக்க முடியவில்லை என்பதால் ஸ்பெயின் 2-1 என வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. நெதர்லாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணி வீழ்த்தியது.

The post பெண்களுக்கான 9-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர்: நெதர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது ஸ்பெயின் அணி appeared first on Dinakaran.

Tags : 9th FIFA Women's World Cup ,Spain ,Netherlands ,Brisbane ,Women's World Cup ,9th Women's World Cup ,9th Women's World Cup football ,Dinakaran ,
× RELATED ‘ஐசியு’ நோயாளிகளின் மனநலனை...