×

டிஐஜி தந்தைக்கு மகள் ‘சல்யூட்’: சமூக வலைதளத்தில் வைரல்

மொரதாபாத்: இந்திய – திபெத் எல்லையோரக் காவல்துறை டிஐஜி-யின் மகள் காவல் துறை பயிற்சியை முடித்து, தனது தந்தைக்கு சல்யூட் அடித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.  உத்தரபிரதேச மாநிலம் மொரதாபாத் மாவட்டத்தில் உள்ள டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் காவல்துறை அகாடமியில் அபெக்‌ஷா நிம்பாடியா பயிற்சியை முடித்தார். அவரது பட்டமளிப்பு நிகழ்ச்சியின் போது, அவரது தந்தையும், இந்திய – திபெத் எல்லையோரக் காவல்துறையினரின் டிஐஜி அதிகாரியுமான நிம்பாடியாவும், அவரது தாய் பிம்லேஷ் ஆகியோரும் கலந்துகொண்டனர். இந்திய – திபெத் எல்லையோரக் காவல்துறையினரின் தொண்டு நிறுவனமான ஹிம்வீர் வைவ்ஸ் வெல்ஃபேர் அசோசியேஷன் என்ற அமைப்பின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், அபெக்‌ஷாவும், அவரது டிஐஜி தந்தையும் ஒருவருக்கு ஒருவர் சல்யூட் அடித்துக் கொள்ளும் படங்கள் வெளியிடப்பட்டன. இந்தப் படங்களில் தந்தையும், மகளும் கம்பீரமாக காவல்துறை உடையில் இருப்பதை பலரும் நெகிழ்ச்சியோடு பாராட்டி வருகின்றனர்….

The post டிஐஜி தந்தைக்கு மகள் ‘சல்யூட்’: சமூக வலைதளத்தில் வைரல் appeared first on Dinakaran.

Tags : DIG ,Moradabad ,Border Police ,
× RELATED ‘கூப்பிடும்போது எல்லாம் வரவேண்டும்’...