×

பெரம்பலூர் தாலுகாவில் நிலப்பிரச்னை தீர்க்க சிறப்பு மனு விசாரணை முகாம்

 

பெரம்பலூர், ஆக.11: பெரம்பலூர் தாலுகாவில் வசிக்கும் பொது மக்களின் நிலப்பிரச்னை தொடர்பான மனுக்களை விசாரிக்க சிறப்பு மனுமுகாம் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளா தேவி உத்தரவி ன்படி, பெரம்பலூர் மாவட்ட காவல்துறை மற்றும் பெரம்பலூர் வட்ட வருவாய் துறையினர் இணைந்து நேற்று (10ம்தேதி) பெரம்பலூர் தாசில்தார் அலுவலகத்தில், பொது மக்களின் நிலம் தொடர்பான பிரச்னைகளைத் தீர்க்க சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்றது.

பெரம்பலூர் தாசில்தார் கிருஷ்ணராஜ் தலைமையில், சமூகப் பாதுகாப்புத் திட்ட தாசில்தார் சுகுணா, துணை தாசில்தார் சிலம்பரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த முகாமில், பெரம்பலூர் மாவட்ட நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு சப்.இன்ஸ்பெக்டர் அபுபக்கர், சப். இன்ஸ்பெக்டர்கள் நல்லம்மாள், ராமர் மற்றும் ஏட்டு பாலமுருகன், வருவாய்த் துறையினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த மனு விசாரணை முகாமில் மொத்தம் 19 மனுக்கள் பெறப்பட்டு 18 மனுக்களுக்கு விசாரணைக்குப் பிறகு தீர்வு காணப்பட்டது. ஒரு மனுதாரர் முகாமிற்கு வரவில்லை.

The post பெரம்பலூர் தாலுகாவில் நிலப்பிரச்னை தீர்க்க சிறப்பு மனு விசாரணை முகாம் appeared first on Dinakaran.

Tags : Hearing Camp ,Perambalur Taluk ,Perambalur ,Perambalur taluka ,
× RELATED தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி...