×

மதுரையில் அடிமாடாக செல்லவிருந்த பசுவை காப்பாற்றிய டாக்டர்கள்

மதுரை, ஆக. 11: மதுரையில் நோய் பாதிப்பால் அடிமாடாக விற்பனை செய்ய போவதாக உரிமையாளர் கூறிய நிலையில், அந்த பசுவை அரசு கால்நடை டாக்டர்கள் குணப்படுத்தினர். மதுரை தல்லாகுளம் கால்நடை பன்முக மருத்துவமனையில் கடந்த வாரம் அலங்காநல்லூர் தண்டலை கிராமத்தில் இருந்து பசு மாடு ஒன்று கன்று ஈன்றெடுக்க முடியாத நிலையில் கொண்டு வரப்பட்டது. அங்கு அறுவை சிகிச்சை இல்லாமல் கன்றை எடுப்பதற்கு டாக்டர்கள் முயன்றனர். ஆனால் வீக்கம் அதிகமாக இருந்ததால் எடுக்க முடியவில்லை. இந்திலையில் மாட்டின் உரிமையாளர் ஆபரேசன் வேண்டாம் என்றும், வியாபாரியிடம் அடிமாடாக அதனை விற்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

அவரை தலைமை டாக்டர், சமாதானம் செய்து அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொள்ள வைத்தார்.இதை தொடர்ந்து டாக்டர் சரவணன் தலைமையில், டாக்டர்கள் செந்தில் செல்வகுமார், மெரில்ராஜ், ஆறுமுகம், விஜயகுமார், முத்துராமன், முத்துராம், அறிவழகன் ஆகியோர் பாதிக்கப்பட்ட பசுவிற்கு அறுவை சிகிச்சை செய்தனர். ஒரு வார கண்காணிப்புக்கு பின் நேற்று முன்தினம் நல்ல நிலையில் பசுவினை வீட்டிற்கு கொண்டு சென்றனர். மாட்டின் உரிமையாளர் கூறுகையில், ‘அடிமாட்டுக்கு செல்லவிருந்த பசுவை காப்பாற்றிய டாக்டர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன்’ என்றார்.

The post மதுரையில் அடிமாடாக செல்லவிருந்த பசுவை காப்பாற்றிய டாக்டர்கள் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Madurai, Ga. ,
× RELATED மதுரை நகர் பகுதியில் கஞ்சா விற்ற ஆறு பேர் கைது