×

நாட்டு துப்பாக்கியுடன் சுற்றிய இருவருக்கு ₹2 லட்சம் அபராதம்

அரூர், ஆக.11: அரூர் தீர்த்தமலை அருகே வனப்பகுதியில் வேட்டையாட, நாட்டு துப்பாக்கியுடன் சுற்றிய 2 பேருக்கு, மாவட்ட வன அலுவலர் ₹2லட்சம் அபராதம் விதித்தார். தர்மபுரி மாவட்ட அரூர் அருகே தீர்த்தமலை வனச்சரகர் பெரியண்ணன் தலைமையிலான வனவர்கள் கணபதி, வடிவேல், வனக்காப்பாளர்கள் வெங்கடேசன், மதன்குமார் மற்றும் வனத்துறையினர், தீர்த்தமலை அருகே கத்திரிப்பட்டி, கம்பாலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த சேட்டு மகன்கள் தருமன்(28), சரவணன்(20) ஆகியோர் நாட்டு துப்பாக்கி வைத்து, வனவிலங்குகளை வேட்டையாட முயற்சி செய்யும் போது கையும், களவுமாக பிடிப்பட்டனர்.அவர்களிடம் இருந்த நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்து, இருவரையும் மாவட்ட வன அலுவலர் அப்பால நாயுடு முன் ஆஜர்படுத்தினர். அவர் நபர் ஒருவருக்கு தலா ₹1லட்சம் வீதம் ₹2லட்சம் அபராதம் விதித்து, எச்சரிக்கை செய்து அனுப்பினார்.

The post நாட்டு துப்பாக்கியுடன் சுற்றிய இருவருக்கு ₹2 லட்சம் அபராதம் appeared first on Dinakaran.

Tags : Arur ,District Forest Officer ,Arur Theerthamalai ,
× RELATED புலிகள் காப்பகம் வனப்பகுதியில் தீ ஏற்படாமல் பாதுகாக்க விழிப்புணர்வு