×

14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார செவிலியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

 

விருதுநகர், ஆக.11: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்க மாவட்ட தலைவர் வள்ளியம்மாள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் டோட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் நியமிக்க வேண்டும். பழுதடைந்து தங்குவதற்கு தகுதியற்ற துணை மைய கட்டிடத்திற்கு வாடகை பிடித்தம் செய்வதை நிறுத்தவும், பிடித்த தொகையை திருப்பி தரவும், தனியார் கட்டிங்களில் இயக்கும் துணை மையங்களுக்கான வாடகையை உடன் வழங்க வேண்டும். 5 வருடங்கள் பணி முடித்தவர்களுக்கு கிரேடு 1 மற்றும் 10 வருட பணி முடித்தவர்களுக்கு கிரேடு 2 ஆகவும் அடுத்த கட்ட ஊதிய விகிதத்தில் நிர்ணயம் செய்ய வேண்டும்.

அலுவலக நேரம் தவிர்த்து இரவு நேரங்களில் ஆய்வு கூட்டங்கள் நடத்துவதை தவிர்த்து, பணிக்கு தொடர்பில்லாத வேலைகளை செய்ய வலியுறுத்துவதை, மிரட்டுவதை கைவிட வேண்டும்.
ஊரக பகுதி மக்களுக்கு அரசு நலத்திட்டங்கள் சென்றடைய துணை சுகாதார நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் ஜான்சிராணி, முத்துமாரி, சுகந்தி, முத்தானந்தம் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

The post 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார செவிலியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Health Nurses Association ,Virudhunagar ,All Health Nurses Association District ,President Valliammal ,Virudhunagar Collector's Office ,
× RELATED விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி...