×

டிவிட்டர் நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட ரூ.50 லட்சம் அபராதத்துக்கு தடை: கர்நாடக ஐகோர்ட் அதிரடி

பெங்களூரு: ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், 2021ம் ஆண்டு பிப்ரவரி 2 முதல் 2022ம் ஆண்டு பிப்ரவரி 28 வரையிலான 175 டிவீட்டுகள், 1474 டிவிட்டர் கணக்குகள் மற்றும் 256 யுஆர்எல் மற்றும் ஒரு ஹேஷ்டேக் ஆகியவற்றை நீக்குமாறு டிவிட்டருக்கு உத்தரவிட்டது. ஆனால் அவற்றில் 39 யுஆர்எல்-களை நீக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இது அரசியலமைப்பு வழங்கும் பேச்சு மற்றும் கருத்துரிமைக்கு எதிராக இருப்பதாகவும் கூறி டிவிட்டர் நிறுவனம் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

அந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணா எஸ் தீக்‌ஷித், டிவிட்டர் நிறுவனத்துக்கு ரூ.50 லட்சம் அபராதம் விதித்ததுடன், அதை ஆகஸ்ட் 14ம் தேதிக்குள் கட்ட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். கர்நாடக உயர்நீதிமன்ற தனிநீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து டிவிட்டர் நிறுவனம் மேல்முறையீடு செய்தது. அந்த மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசன்னா பி வரலே மற்றும் நீதிபதி கேஜிஎஸ் கமல் அடங்கிய அமர்வு விசாரித்தது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசன்னா பி வரலே மற்றும் நீதிபதி கேஜிஎஸ் கமல் ஆகியோர் அடங்கிய அமர்வு, டிவிட்டர் நிறுவனத்துக்கு ரூ.50 லட்சம் அபராதம் விதித்த தனிநீதிபதியின் தீர்ப்புக்கு, இவ்வழக்கின் அடுத்த விசாரணை வரை தடை விதிக்கப்படுகிறது. டிவிட்டர் நிறுவனம் ஒரு வாரத்திற்குள் நீதிமன்றத்தில் ரூ.25 லட்சம் செலுத்த வேண்டும் என கூறி விசாரணையை வரும் 24ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

The post டிவிட்டர் நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட ரூ.50 லட்சம் அபராதத்துக்கு தடை: கர்நாடக ஐகோர்ட் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Twitter ,Karnataka iCourt ,Bengaluru ,Union Ministry of Information Technology ,
× RELATED “வெறுப்புக்கு எதிராக நான் வாக்களித்துவிட்டேன்; நீங்களும்…”: பிரகாஷ் ராஜ்