×

மேற்கு வங்கத்தில் விநோதம் மம்தா கட்சிக்கு எதிராக கைகோர்த்த பாஜ, காங், கம்யூ.

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் அண்மையில் உள்ளாட்சி தேர்தல் நடநதது. இதில், சில பஞ்சாயத்து போர்டுகளில் திரிணாமுல் காங்கிரஸ், பாஜ சரிசமமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. இங்கு தலைவர், துணைத் தலைவர் பதவிகளை பிடிப்பதில் கடும் போட்டி ஏற்பட்டது. கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள மகிஹடால் பஞ்சாயத்து போர்டில் மொத்தமுள்ள 18 இடங்களில் பாஜவும், திரிணாமுல் காங்கிரசும் தலா 8ல் வெற்றி பெற்றிருந்தன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2 இடங்களில் வென்றிருந்தது. இங்கு மார்க்சிஸ்ட் ஆதரவுடன் தலைவர் பதவியை பாஜ பிடித்தது. துணைத் தலைவர் பதவி மார்க்சிஸ்ட் வார்டு உறுப்பினருக்கு வழங்கப்பட்டது. இதே போல் சில இடங்களில் காங்கிரஸ் ஆதரவுடனும் பாஜ தலைவர் பதவியை பிடித்துள்ளது.

The post மேற்கு வங்கத்தில் விநோதம் மம்தா கட்சிக்கு எதிராக கைகோர்த்த பாஜ, காங், கம்யூ. appeared first on Dinakaran.

Tags : BJP ,Congress ,Commune ,Vinodham Mamata ,West Bengal ,Kolkata ,Trinamool Congress ,Dinakaran ,
× RELATED இந்திய அரசியலமைப்பு ஜனநாயகத்தின்...