×

‘எரிஸ்’ வகை கொரோனா பரவல்

புதுடெல்லி: சார்ஸ் கோவிட் -2 வின் இஜி.5 அல்லது எரிஸ் வகை உருமாறிய கொரோனா இந்த ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி முதல் முதலாக கண்டறியப்பட்டது. தற்போது இந்த இஜி.5 திரிபானது இந்தியா உட்பட உலக நாடுகள் பலவற்றிலும் பரவத்தொடங்கி உள்ளது. ஆனால் இந்த திரிபானது பொது சுகாதாரத்துக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக தெரியவில்லை என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் எரிஸ் திரிபின் இடர்பாடுகள் குறித்து மதிப்பீடு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் உலக சுகாதார அமைப்பானது எரிஸ் அல்லது இஜி.5 உருமாற்றத்தை ‘கவனத்துக்குரிய உருமாற்றம்’ என வகைப்படுத்தி உள்ளது.

The post ‘எரிஸ்’ வகை கொரோனா பரவல் appeared first on Dinakaran.

Tags : New Delhi ,
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில்...