×

ஆதிர் ரஞ்சன் சஸ்பெண்ட்

பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி அவையில் நேற்று பேசியதைத் தொடர்ந்து, அவர் அவை நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறி அவரை சஸ்பெண்ட் செய்வதற்கான தீர்மானத்தை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கொண்டு வந்தார். அந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பிரதமர் மோடிக்கு எதிராக பேசியதற்காக வரலாற்றில் முதல் முறையாக எதிர்க்கட்சியின் அவைத் தலைவரை சஸ்பெண்ட் செய்தது ஜனநாயகத்திற்கு விரோதமானது என எதிர்க்கட்சி எம்பிக்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

The post ஆதிர் ரஞ்சன் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Adhir Ranjan ,Congress ,Adhir Ranjan Choudhary ,Modi ,House ,
× RELATED ராகுலை பிரதமர் ஆக்க கோரிக்கை வைப்போம்: ஆதிர் ரஞ்சன் சவுத்ரி