×

புதுக்கோட்டை பொற்பனைக்கோட்டையில் நடந்து வரும் அகழாய்வில் வட்டவடிவ சுவரின் ஒரு பகுதி கண்டெடுப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் கடந்த மே மாதம் 20-ம் தேதி முதற்கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்றது. தமிழகத்தில் அதிக தொல்லியல் எச்சங்கள் நிறைந்த மாவட்டமாக புதுக்கோட்டை மாவட்டம் காணப்படுகிறது. அதனடைப்படையில் இங்கு அகழாய்வு பணிகளை மேற்கொள்ளவேண்டும் என புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த தொல்லியல் ஆய்வு கழகத்தினர் உள்பட பலர் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதன் அடிப்படையில் தமிழக அரசு கடந்த மே மாதம் 20-ம் தேதி முதற்கட்ட அகழாய்வு பணிகளை தொடங்கியது. அங்கு மொத்தம் 11 குழிகள் அமைக்கபட்டு அங்கு அகழாய்வுபணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு சுமார் 66 நாட்களாக இங்கு அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் 333 தொல்பொருட்கள் கண்டறியபட்டுள்ளது.

இதில் ஏற்கனவே தங்க அணிகலன், கண்ணாடி மணிகள், விலங்கு எலும்புகளில் செய்த நெசவுத் தொழிலுக்கு பயன்படும் பொருட்கள் மற்றும் கார்னிலியன் கற்கள் கண்டெடுக்கப்பட்டது. பொற்பனைக்கோட்டையில் சங்ககால கட்டுமானம் கிடைத்துள்ளது. 13-ம் நூற்றாண்டு வரையிலான தொல் பொருட்கள் இங்கு கிடைக்கபட்டதால், தொடர்ந்து ஒரு நாகரீகம், பண்டைய தமிழர்கள் வாழ்விடம் அமைந்தற்கான சான்று கிடைத்துள்ளது. இந்த நிலையில் இன்று வட்டவடிவிலான கண்டுபிடிக்கபட்டுள்ளது.

The post புதுக்கோட்டை பொற்பனைக்கோட்டையில் நடந்து வரும் அகழாய்வில் வட்டவடிவ சுவரின் ஒரு பகுதி கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Pudukottai Polpanaikottai ,Pudukottai ,Polpanaikottai ,Tamil Nadu ,Pudukkottai Polpanaikottai ,
× RELATED குடியிருப்பு பகுதிகளில் கடைசி...