
- அண்ணா பல்கலைக்கழகம்,
- சென்னை
- பி.ஏ.
- பா RC
- குழு
- அண்ணா பல்கலைக்கழகம்
- பா பா RC
- சென்னை அண்ணா பல்கலைக்கழகம்
- என். பா RC
- அங்கீகாரத்திற்கான குழு
- தின மலர்
சென்னை: சென்னை அண்ணா பல்கலை.க்கு என்.ஏ.ஏ.சி. அங்கீகாரம் வழங்குவதற்கான ஆய்வுக் குழு நாளை ஆய்வு செய்ய உள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் அளித்த சுய மதிப்பீட்டு அறிக்கை அடிப்படையில் என்.ஏ.ஏ.சி. அங்கீகார குழு நாளை ஆய்வு மேற்கொள்கிறது. என்.ஏ.ஏ.சி. அமைப்பின் சார்பில் பல்கலைக்கழகங்களில் இருந்து நியமிக்கப்பட்ட 8 பேராசிரியர்கள் அடங்கிய குழு ஆய்வு செய்கிறது. அண்ணா பல்கலைக்கழகத்தின் என்.ஏ.ஏ.சி. அங்கீகாரம் 2019ம் ஆண்டு முதல் காலாவதியானது.
கடந்த 2019-க்கு பின் கொரோனா உள்ளிட்ட காரணங்களால் என்.ஏ.ஏ.சி. சான்று கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. மீண்டும் என்.ஏ.ஏ.சி. அங்கீகாரம் பெற பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என கல்வியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அண்ணா பல்கலைக்கழகத்தின் என்.ஏ.ஏ.சி. அங்கீகாரம் காலாவதியானதால் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்நிலையில், அங்கீகார மதிப்பீட்டிற்காக நாளை என்.ஏ.ஏ.சி. குழு அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
The post சென்னை அண்ணா பல்கலை.க்கு என்.ஏ.ஏ.சி. அங்கீகாரம் வழங்குவதற்கான ஆய்வுக் குழு நாளை ஆய்வு..!! appeared first on Dinakaran.