×
Saravana Stores

‘பாரத் கவுரவ்’ ரயில் இன்று திருவண்ணாமலைக்கு வருகை

திருவண்ணாமலை: திருவண்ணாமலைக்கு இன்று 300 சுற்றுலா பயணிகளுடன் ‘பாரத் கவுரவ்’ ரயில் வந்தது. இதில் வந்த பயணிகள் அண்ணாமலையார் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர். இந்தியாவில் உள்ள சுற்றுலா தலங்களுக்கும், பாரம்பரிய கோயில்களுக்கும் ரயில்களை இயக்க ‘பாரத் கவுரவ்’ ரயில் திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. நாட்டின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையிலும், ரயில்வேக்கு வருவாய் ஈட்டும் வகையிலும், சுற்றுலா துறையை மேம்படுத்தும் வகையிலும் இந்த ரயிலை இயக்க அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த ரயிலில் உள்ள அனைத்து ெபட்டிகளும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டு சொகுசு ரயிலாக மாற்றப்பட்டுள்ளது. இந்த ரயில்களை இயக்குவது மட்டுமே ரயில்வே நிர்வாகத்தின் பொறுப்பு. மற்ற ேசவைகள் அனைத்தும் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன்படி தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் இருந்து இந்த சுற்றுலா சொகுசு ரயில் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களைச் சேர்ந்த 300 பயணிகளுடன் புறப்பட்டது.

இந்த ரயில் இன்றுகாலை திருவண்ணாமலை ரயில் நிலையம் வந்தது. இந்த ரயிலில் பயணம் செய்த சுற்றுலா பயணிகள் அண்ணாமலையார் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் கிரிவல பாதை மற்றும் சுற்றுபுற பகுதிகளில் உள்ள பல்வேறு கோயில்களுக்கும் சென்று தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து இன்று மாலை இந்த ரயில் மதுரைக்கு புறப்பட்டு செல்கிறது.

The post ‘பாரத் கவுரவ்’ ரயில் இன்று திருவண்ணாமலைக்கு வருகை appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai ,Annamalaiyar ,
× RELATED இளம்பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டல் சென்னை வாலிபர் கைது