×

சரசரவென குறைந்த தக்காளி விலை.. ஒரு கிலோ ரூ.70க்கு விற்பனை: மற்ற காய்கறிகளின் விலை என்ன தெரியுமா?

சென்னை: வரத்து அதிகரிப்பு காரணமாக கோயம்பேட்டில் தக்காளி விலை சரிந்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த ஒரு மாதமாக வரத்து குறைவால், ஒரு கிலோ தக்காளி ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன் ரூ.120க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்தநிலையில், தக்காளி வரத்து அதிகரிப்பு காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 700 டன் காய்கறிகள் வந்தன. இதனால் ஒரு கிலோ தக்காளி ரூ.20 குறைந்து ஒரு கிலோ தக்காளி ரூ.70க்கு விற்கப்படுகிறது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நவீன் தக்காளி கிலோ ரூ.90க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இது குறித்து கோயம்பேடு மார்க்கெட் சிறு, மொத்த வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.எஸ்.முத்துகுமார் கூறும்போது, ‘‘கடந்த ஒரு மாதமாக வரத்து குறைவால் கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளியின் விலை உயர்ந்து வந்தது.தற்போது தமிழ்நாட்டில் தக்காளி விளைச்சல் அதிகரித்து வருவதால் விலை குறைந்துள்ளது. கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் மழை பெய்துவருவதால் தக்காளியின் விலை ஏற்றம், இறக்கமாக உள்ளது. இந்த மாநிலங்களில் மழை ஓய்ந்துவிட்டால் தக்காளி விலை படிபடியாக குறையும்.’’ என்றார்.

மேலும் உச்சத்தில் இருந்து வந்த சின்னவெங்காயத்தின் விலையும் இன்று சரிந்துள்ளது. நேற்று கிலோ ரூ.80க்கு விற்பனையான சின்ன வெங்காயம் இன்று ரூ.70க்கு விற்கப்பட்டு வருகிறது. அதேவேளையில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.22க்கு விற்பனையாகிறது. உருளை கிலோ ரூ.33, ஊட்டி கேரட் ரூ.50, பீன்ஸ் ரூ.40, ஊட்டி பீட்ரூட் ரூ.40, வெண்டைக்காய் ரூ.30, சேனைக்கிழங்கு ரூ.44, முருங்கைக்காய் ரூ.30, காலிபிளவர் ரூ.35, பச்சை மிளகாய் ரூ.50, பட்டாணி ரூ.180, இஞ்சி ரூ.210, பூண்டு ரூ.200, பச்சை குடைமிளகாய் ரூ.50, வண்ண குடைமிளகாய் ரூ.160, தேங்காய் ரூ.25க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

The post சரசரவென குறைந்த தக்காளி விலை.. ஒரு கிலோ ரூ.70க்கு விற்பனை: மற்ற காய்கறிகளின் விலை என்ன தெரியுமா? appeared first on Dinakaran.

Tags : Sarasaravena ,Chennai ,Coimpet ,Coimbadu Market ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...