×

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது; விடிய விடிய ரசிகர்கள் கொண்டாட்டம்..!!

பெங்களூரு: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது. ரஜினிகாந்தின் 169வது திரைப்படம் ஜெயிலர். நெல்சன் இயக்கிய இப்படத்தில் டைகர் முத்துவேல் பாண்டியன் என்கிற ஜெயிலர் கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளார். இதில் ரஜினியின் மனைவியாக ரம்யா கிருஷ்ணனும், அவரது மகன் கேரக்டரில் வஸந்த் ரவியும் நடித்துள்ளனர். இப்படத்தில் வில்லனாக மலையாள நடிகர் விநாயகன் நடித்துள்ளார். மேலும் கேமியோ ரோலில் மோகன்லால், தமன்னா, ஜாக்கி ஷெராப், ஷிவ ராஜ்குமார் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

ஜெயிலர் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்து உள்ளார். இப்படம் இன்று உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகி உள்ளது. பெங்களூரு, ஆந்திராவில் உள்ள திரையரங்குகளில் ஜெயிலர் படம் வெளியானதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பெங்களூருவில் அதிகாலை காட்சியை காண ரஜினிகாந்த் ரசிகர்கள் திரையரங்குகளில் குவிந்தனர்.

திரையரங்கு வாயிலில் ரசிகர்கள் ஆட்டம், பாட்டத்துடன் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜெயிலர் திரைப்படம் வெளியான திரையரங்குகள் விழாக்கோலம் பூண்டுள்ளன. நள்ளிரவிலேயே தியேட்டரில் குவிந்த ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்கள் தலைவர் படத்தை வரவேற்றனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

கர்நாடகத்தில் 300 திரையரங்குகளில் ஜெயிலர் திரைப்படம் வெளியானது. இதனிடையே மதுரையில் ரஜினி ரசிகர்கள் மது அருந்த மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். ஜெயிலர் திரைப்படம் வெளியானதை ஒட்டி ரஜினி ரசிகர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

The post சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது; விடிய விடிய ரசிகர்கள் கொண்டாட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Rajini ,Sun ,Bengaluru ,Sun Pictures ,
× RELATED தமிழகத்தில் இன்று தொடங்குகிறது அக்னி...