×

கிளாஸ்கோ மாநாட்டில் பிரதமர் மோடி உரை பருவநிலை மாற்ற கொள்கைகளை பள்ளி பாடத்தில் சேர்க்க வேண்டும்

கிளாஸ்கோ: ஜி20 மற்றும் கிளாஸ்கோ பருவநிலை மாநாடுகளில் பங்கேற்க பிரதமர் மோடி 5 நாள் சுற்றுப்பயணமாக கடந்த 29ம் தேதி டெல்லியிருந்து புறப்பட்டார். இத்தாலி தலைநகர் ரோம் சென்றடைந்த அவர் கடந்த 30, 31ம் தேதிகளில் ஜி20 மாநாட்டில் பங்கேற்றார். இதைத் தொடர்ந்து, பருவநிலை மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி ரோமில் இருந்து நேற்று முன்தினம் இரவு புறப்பட்டு, ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகருக்கு வந்தடைந்தனர். கிளாஸ்கோ பருவநிலை மாநாடு கடந்த 29ம் தேதி தொடங்கி வரும் 12ம் தேதி வரை நடக்கிறது. இதில், 130க்கும் மேற்பட்ட உலக தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு நவம்பர் 1, 2ம் தேதிகளில் நடக்கிறது. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், ஐநா பொதுச் செயலாளர் ஆன்டனியோ கட்டரஸ் ஆகியோர் கூட்டாக பிரதமர் மோடியை வரவேற்றனர். அறிமுக நிகழ்ச்சிக்குப் பிறகு பிரதமர் மோடி, போரிஸ் ஜான்சன் இடையேயான பேச்சுவார்த்தை நடைபெற்றது.பின்னர், பிரதமர் போரிஸ் ஜான்சன் உரையுடன் பருவநிலை மாநாடு தொடங்கியது. அவரைத் தொடர்ந்து, பல்வேறு நாட்டு தலைவர்கள் உரையாற்றினர்.இதில், உலக வெப்பமயமாதலை கட்டுப்படுத்த இந்தியா எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி பேசினார்.  அவர், ‘‘பள்ளி பாடத்திட்டத்தில் பருவநிலை மாற்றம் குறித்தும் அதை கட்டுப்படுத்தும் கொள்கைகள் குறித்தும் சேர்க்கப்பட வேண்டியது அவசியமாகும். அப்போதுதான் எதிர்கால சிக்கலை அடுத்த தலைமுறைக்கும் நாம் உணர்த்த முடியும்’’ என்றார்….

The post கிளாஸ்கோ மாநாட்டில் பிரதமர் மோடி உரை பருவநிலை மாற்ற கொள்கைகளை பள்ளி பாடத்தில் சேர்க்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Glasgow conference ,Glasgow ,G20 ,Glasgow Climate Conferences ,PM ,Modi ,
× RELATED அதிக அளவில் மக்களை வாக்களிக்க வைக்க...