×

538 பயனாளிகளுக்கு ₹1.61 கோடி நல உதவிகள்

 

நாமகிரிப்பேட்டை, ஆக.10: மங்களபுரத்தில் நடந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில், 538 பயனாளிகளுக்கு ₹1.61 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.
நாமகிரிப்பேட்டை அடுத்த மங்களபுரத்தில், மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. இதில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், கலெக்டர் உமா ஆகியோர் கலந்து கொண்டு, 538 பயனாளிகளுக்கு ₹1.61 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

மேலும், ₹20 லட்சம் மதிப்பீட்டில் ஒரு திட்டப்பணிக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது. இம்முகாமில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது: ராசிபுரம் மக்கள் உரிய சிகிச்சைகள் பெறுவதற்காக, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அறிவிக்கப்பட்டு கூடுதல் உட்கட்டமைப்பு வசதிகளுடன் மேம்படுத்தப்படவுள்ளது. சென்னையில் உள்ளதை போன்று, சிறிய தொழில்நுட்ப பூங்கா ராசிபுரத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.

நாமகிரிப்பேட்டைக்கு ஒருங்கிணைந்த வேளாண் மையம் கொண்டு வரப்படவுள்ளது. அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ₹68 லட்சம் மதிப்பீட்டில் சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ₹92 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. குடும்ப தலைவிகளுக்கு மாதம் ₹1,000 வழங்க அனைத்து பகுதிகளிலும் கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், முன்னாள் எம்எல்ஏ ராமசுவாமி, மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவக்குமார், கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் செல்வகுமரன், தனித்துணை கலெக்டர் பிரபாகரன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ரமேஷ், வட்டார அட்மா திட்ட குழு தலைவர் ரவிந்திரன், பிடிஓ.,க்கள் சரவணன், பாலமுருகன், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post 538 பயனாளிகளுக்கு ₹1.61 கோடி நல உதவிகள் appeared first on Dinakaran.

Tags : Namakrippet ,Mangalapuram ,Dinakaran ,
× RELATED சாலையில் பெருக்கெடுத்து ஓடிய 1.5 லட்சம் முட்டைகள்