×

நிலக்கோட்டை பாலம்பட்டியில் புதிய தார் சாலை பணி துவக்கம்

நிலக்கோட்டை: நிலக்கோட்டை அருகே நரியூத்து ஊராட்சி, பாலம்பட்டி கிராமத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் கிராமப்புற சாலை மேம்பாடு திட்டத்தின் கீழ் பாலம்பட்டி முதல் நரியூத்து வரை சுமார் 4 கிலோ மீட்டர் சாலையை ரூ.98 லட்சம் மதிப்பில் புதிய தார்சாலை அமைக்கும் பணிக்கான பூமிபூஜை விழா நேற்று நடைபெற்றது. திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் சவுந்திரபாண்டியன் கலந்து கொண்டு சாலை பணியினை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய உதவி பொறியாளர் செல்வக்குமார், ஒன்றிய துணை செயலாளர்கள் ராஜாங்கம், வெள்ளைச்சாமி, மாவட்ட பிரதிநிதி தெய்வேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் கவிதா அழகேசன், இளைஞரணி நிர்வாகி ஆரோக்கியம், தகவல் தொழில்நுட்ப நிர்வாகி பதினெட்டாம்படி மற்றும் ஒன்றிய அலுவலர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

The post நிலக்கோட்டை பாலம்பட்டியில் புதிய தார் சாலை பணி துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Nilakottai Palampatti ,Nilakottai ,Nariuthu panchayat ,Palambatti ,Tamil Nadu ,Chief Minister ,
× RELATED நிலக்கோட்டை சக்கையநாயக்கனூரில்...