×

திருவாரூர் அருகே விவசாயிகளுக்கு வேளாண் தொழில்நுட்ப பயிற்சி

திருவாரூர்: திருவாரூர் அருகே பழையவலம் கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்து விவசாயிகளுக்கு வேளாண் அலுவலர்கள் விளக்கமளித்தனர்.
திருவாரூர் வட்டாரம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாநில விரிவாக்க உறுதுணை சீரமைப்புத்திட்டம், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் கீழ் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் பழையவலம் கிராமத்தில் கிராம வேளாண் முன்னேற்றகுழு விவசாயிகளுக்கு வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, விதைச்சான்று மற்றும் அங்கக சான்று துறையிலிருந்து தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது.

பயிற்சியில் திருவாரூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சந்திரசேகரன் கலந்துகொண்டு வேளாண்துறையை சார்ந்த திட்டங்கள் குறித்து விளக்கினார். வேளாண்மை அலுவலர் ஸ்வேதா, தோட்டக்கலை உதவி அலுவலர் அன்பரசன், விதைச்சான்று மற்றும் அங்கக சான்று துறை அலுவலர் சதீஸ்குமார் ஆகியோர் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு விதைதேர்வு, விதை உற்பத்தி, மண் பரிசோதனையின் அவசியம், இலை வண்ண அட்டையை பயன்படுத்தி உரமிடுதல், வேளாண்மை விரிவாக்க மையங்களில் இடுபொருள் இருப்பு உள்ளிட்ட தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கினார்.

அட்மா திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜ் விவசாயிகள் உழவன் செயலி பதிவிறக்கம் செய்தல் மற்றும் செயலியினை பயன்படுத்தி பண்ணை இயந்திரங்களை வாடகைக்கு எடுத்தல், காலநிலை அறிதல், சந்தை நிலவரம் அறிதல், விதை இருப்பு நிலை, இடுபொருள் முன்பதிவு, பயிர்காப்பீடு விபரம், மானிய திட்டங்கள், உரம் இருப்பு விபரம் அறிதல், உழவர் அலுவலர் தொடர்பு திட்டம், பூச்சி நோய் கண்காணிப்பு பரிந்துரைகள், தரிசு நில மேம்பாடு, பட்டுவளர்ச்சி துறை போன்ற விபரங்களை அறிந்திட உழவன் செயலி பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும் என்றார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் மதுமிதா மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

The post திருவாரூர் அருகே விவசாயிகளுக்கு வேளாண் தொழில்நுட்ப பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Thiruvarur ,Tiruvarur ,Olayawalam ,
× RELATED திருவாரூர் அருகே பரபரப்பு: பயங்கர...