
- தஞ்சாவூர் கழகம்
- தஞ்சாவூர்
- கல்லுக்குளம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம்
- தஞ்சாவூர் மாநகராட்சி
- தின மலர்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட கல்லுகுளம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தினமும் மாலை 4 மணி முதல் ஒவ்வொரு நாளும் ஒரு சிறப்பு மருத்துவ பிரிவு பல்நோக்கு சிறப்பு மருத்துவம் சிறப்பு மருத்துவர்களை கொண்டு கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்று வருகிறது. திங்கட்கிழமை பொது மருத்துவம், செவ்வாய் கிழமை மகளிர் நல மருத்துவர், புதன்கிழமை குழந்தைகள் நல மருத்துவர், வியாழக்கிழமை கண் மருத்துவர் மற்றும் இயன்மறை மருத்துவர், வெள்ளிக்கிழமை தோல் மருத்துவர் மற்றும் பல் மருத்துவர், சனிக்கிழமை மனநல மருத்துவர் வாரத்தின் ஆறு நாள்களுக்குமே இந்த பல்நோக்கு சிறப்பு மருத்துவம் நடைபெற்று வருகிறது. இதுவரை இந்த பல்நோக்கு சிறப்பு மருத்துவத்தின் மூலம் 13,473 நபர்கள் பயன் அடைந்துள்ளனர். எனவே பொதுமக்கள் இந்த அரிய மருத்துவ சேவையை கட்டணமில்லாமல் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தஞ்சாவூர் மாநகராட்சியில் பல்நோக்கு சிறப்பு மருத்துவம் appeared first on Dinakaran.