×

ஏராளமானோர் நேர்த்திகடன் கணக்கெடுப்பில் விடுபட்டிருந்தால் உடனே தகவல் தெரிவிக்கவும் சாலையோர வியாபாரிகளுக்கு ஆணையர் அறிவுறுத்தல்

வேதாரண்யம்: வேதாரண்யம் நகராட்சியில் சாலையோர வியாபாரிகள் கணக்கெடுப்பில் விடுபட்டிருந்தால் தெரிவிக்கலாம் என நகராட்சி ஆணையர் ஹேமலதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: வேதாரண்யம் நகராட்சி பகுதியில் சாலையோர வியாபாரிகள் கணக்கெடுக்கும் பணியில் யாராவது விடுபட்டிருந்தால் தொடர்பு கொள்ளலாம் என வேதாரண்யம் நகராட்சி ஆணையர் ஹேமலதா தெரிவித்துள்ளார். வேதாரண்யம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலையோரங்களில் வியாபாரம் மேற்கொள்ளும் சாலையோர வியாபாரியின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வகையில், அரசால் பி.எம். எஸ்.நிதி திட்டத்தின் மூலம் வங்கி கடன் உதவி வழங்கப்படுகிறது.

மேலும் 2022-23ம் ஆண்டு இந்த நகராட்சியில் சாலையோர வியாபாரிகள் புதிய கணக்கெடுப்பு செய்யப்பட்டு அவர்களுக்கும் இந்த திட்டத்தின் கீழ் கடன் உதவி வழங்கப்படுகிறது. கணக்கெடுப்பில் எவரேனும் விடுபட்டு இருப்பின் நகராட்சி அலுவலகத்தை தொடர்பு கொண்டு தங்கள் சாலையோர வியாபாரியாக இருக்கும் பட்சத்தில் உரிய விவரங்களுடன் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் இது தொடர்பான விவரங்களுக்கு இத்திட்ட பொறுப்பாளர் நகர அமைப்பு ஆய்வாளருமான அருள்முருகன் 98435 04060 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

 

The post ஏராளமானோர் நேர்த்திகடன் கணக்கெடுப்பில் விடுபட்டிருந்தால் உடனே தகவல் தெரிவிக்கவும் சாலையோர வியாபாரிகளுக்கு ஆணையர் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Vedaranyam ,commissioner ,Hemalatha ,Dinakaran ,
× RELATED கோடை மழை 9,000 ஏக்கரில் உப்பு உற்பத்தி பாதிப்பு