×

இன்று அனைத்து பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்க வேண்டும்

கரூர்: கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்டத்தில் இன்று (ஆக.11) போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பிரசாரம், உறுதிமொழி ஏற்கப்பட உள்ளது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் மாநில அளவிலான விழிப்புணர்வு பிரசாரத்தில் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்க உள்ளார். இதே நேரத்தில் அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவரும் உறுதி மொழி ஏற்க வேண்டும்.

மேலும், பள்ளிகள், கல்லூரிகள் நடை பேரணி, மிதிவண்டி பேரணி, போதை பொருள் தடுப்பு மற்றும் போதை பொருள் இல்லா தமிழகம் என்ற தலைப்பில் ஓவியப்போட்டி, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிக்ள நடத்தி போதை பொருளால் ஏற்படும் தீமை குறித்து 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள், இளைஞர்கள், பெண்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் இணையவழியில் உறுதிமொழி ஏற்றுக் கொள்ள விரும்புவோர் https:enforcementbureautn.org/pledge என்ற இணையதளத்தில் சென்று உறுதிமொழி ஏற்றுக் கொண்டு இணையவழியில் சான்று பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இன்று அனைத்து பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Karur ,Prabhu Shankar ,
× RELATED வீட்டு சிலிண்டரை கடைக்கு பயன்படுத்தியவர் மீது வழக்கு