×

புலவர் செ.ராசு மறைவுக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இரங்கல்

சென்னை: புலவர் செ.ராசு மறைவுக்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: முதல்வர் மு.க.ஸ்டாலின் 8.12.2021 அன்று தமிழறிஞர் புலவர் செ.ராசு நூல்களை நாட்டுடைமை செய்து பரிவுத் தொகையாக ரூ.15 லட்சம் காசோலை வழங்கி சிறப்பித்தார். தமிழ்நாடு அரசின் உ.வே.சா. விருதினை முதன்முதலில் பெற்ற சிறப்புக்கு உரியவர். தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் தொல்லியல் கல்வெட்டியல் துறை தலைவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.வரலாற்று சிறப்புடைய இடங்களுக்கு நேரில் சென்று கள ஆய்வு செய்து செறிவான நடையில் பதிவிடுவது இவரது சிறப்பு. அன்னாரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post புலவர் செ.ராசு மறைவுக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Minister ,M. P. Saminathan ,Pulavar S. Rasu ,Chennai ,Tamil Development ,Information Minister ,MU Saminathan ,Pulavar ,Che ,Rasu ,Chief Minister ,M.K. Stalin ,
× RELATED கவிஞர் முடியரசனுக்கு சிலை முதல்வருக்கு எம்எல்ஏ மாங்குடி நன்றி