×

தமிழ்நாடு அரசு முதல் முறையாக ஹஜ் பயணிகள் 3,987 பேருக்கு தலா ரூ.25,070 மானியம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: தமிழ்நாடு மாநில ஹஜ் குழு மூலம், முதல் முறையாக ஹஜ் பயணம் மேற்கொள்ளும் 3,987 பயனாளிகளுக்கு தலா ரூ.25,070 வீதம் மானியத் தொகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். ஹஜ் பயணத்துக்கான புறப்பாட்டு தளமாக சென்னை அறிவிக்கப்பட்டு, தமிழ்நாட்டு பயணிகள் சென்னையில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொண்டு, தங்கள் ஹஜ் கடமையை நிறைவேற்றி தாயகம் திரும்பியுள்ளனர். முதன்முறையாக ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு அரசு ஹஜ் மானியம் வழங்கி வருகிறது.

அதற்காக இந்த ஆண்டு தமிழ்நாடு அரசால் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தகுதியுள்ள பயணி ஒருவருக்கு ரூ.25,070 வீதம் 3,987 பயனாளிகளுக்கு இந்த மானியத் தொகை வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தினை செயல்படுத்தும் விதமாக, 5 பயனாளிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தலா ரூ.25,070க்கான காசோலைகளை ஹஜ் மானியத் தொகையாக வழங்கினார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் செயலாளர் முகமது நசிமுதீன், செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர், இயக்குநர் ஆசியா மரியம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post தமிழ்நாடு அரசு முதல் முறையாக ஹஜ் பயணிகள் 3,987 பேருக்கு தலா ரூ.25,070 மானியம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Chief Minister ,M.K.Stalin. ,Chennai ,Tamil Nadu State Haj Committee ,
× RELATED நகராட்சி நிர்வாகத்துறை பணிகளால்...