×

கல்வெட்டு அறிஞர் ராசு மரணம் முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: புகழ்பெற்ற கல்வெட்டு அறிஞர் புலவர் செ.ராசு மறைவையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: புகழ்பெற்ற கல்வெட்டு அறிஞர் புலவர் செ.ராசு (85) வயது மூப்பின் காரணமாக மறைந்தார் என அறிந்து வருத்தமுற்றேன். பல கல்வெட்டுகள், செப்பேடுகள், சுவடிகளை பதிப்பித்துத் தமிழுக்கு பெருந்தொண்டாற்றிய அவரது மறைவு தமிழ் ஆய்வுலகத்துக்கு பேரிழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், தமிழறிஞர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post கல்வெட்டு அறிஞர் ராசு மரணம் முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,Rasu ,Chennai ,M.K.Stalin ,Pulavar S.Rasu ,
× RELATED கள்ளச்சாராய விவகாரத்தில் யாருக்கும்...