×

தாதுமணல் நிறுவனத்திடம் மாதம் தோறும் ரூ. 5 லட்சம் வீதம் ரூ.1.72 கோடி வாங்கிய கேரள முதல்வரின் மகள்: வருமானவரித் துறை விசாரணையில் பரபரப்பு தகவல்

திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா. இவர் பெங்களூருவில் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன் எர்ணாகுளத்திலுள்ள சிஎம்ஆர்எல் என்ற தாது மணல் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அந்த நிறுவனம் பல கோடி வரி ஏய்ப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் இந்த சோதனையில் ஒரு டைரி கைப்பற்றப்பட்டது. அதில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்களுக்கு பணம் கொடுத்த விவரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு முதல் 3 வருடங்களுக்கான இந்த நிறுவனத்தின் கணக்குகளை வருமான வரித்துறையினர் பரிசோதித்தனர். இதில் அந்த 3 வருடங்களில் பினராயி விஜயனின் மகள் வீணாவின் சாப்ட்வேர் நிறுவனத்திற்கு மாதந்தோறும் ரூ.5 லட்சம் என்ற கணக்கில் ரூ.1.72 கோடி பணம் கொடுத்ததாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான சசிதரன் கர்த்தாவிடம் வருமானவரித்துறையினர் விசாரணை நடத்தினர். வீணாவின் சாப்ட்வேர் நிறுவனத்திடமிருந்து பெற்ற சேவைக்காக அந்தப் பணம் கொடுக்கப்பட்டதாக அவர் கூறினார். ஆனால் வீணாவின் நிறுவனத்திடமிருந்து எந்த சேவையும் பெறவில்லை என்று வருமான வரித்துறையின் விசாரணையில் தெரியவந்தது. எனவே இது லஞ்சப் பணமாக இருக்கும் என்று வருமானவரித்துறை கருதுகிறது. இது தொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

The post தாதுமணல் நிறுவனத்திடம் மாதம் தோறும் ரூ. 5 லட்சம் வீதம் ரூ.1.72 கோடி வாங்கிய கேரள முதல்வரின் மகள்: வருமானவரித் துறை விசாரணையில் பரபரப்பு தகவல் appeared first on Dinakaran.

Tags : Kerala ,Chief Minister ,Thiruvananthapuram ,Pinarayi Vijayan ,Veena ,Bangalore ,Mineral Sand Company ,Income Tax Department ,Dinakaran ,
× RELATED கடந்த 10 வருடங்களில் எத்தனை...