×

அமைச்சர் ஸ்மிருதி இரானி மீது ஆ.ராசா புகார் எதிர்க்கட்சி எம்பிக்களை கைது செய்வதாக மிரட்டுகிறார்: மக்களவையில் பரபரப்பு

புதுடெல்லி: மக்களவையில் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி தன்னை கைது செய்வதாக பகிரங்க மிரட்டல் விடுப்பதாக திமுக எம்பி ஆ.ராசா குற்றம்சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது. மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் பேசிய ஒன்றிய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, தமிழ்நாடு அரசியல் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார். அப்போது உடனடியாக குறுக்கிட்ட திமுக எம்பி ஆ.ராசா, ‘‘கைது செய்யப்படுவீர் என என்னை அமைச்சர் ஸ்மிருதி இரானி மிரட்டுகிறார். அப்படியென்றால், உச்ச நீதிமன்றம் அவரது கட்டுப்பாட்டில் இருக்கிறதா? நாட்டின் நீதிமன்றங்களை பாஜ அச்சுறுத்தி வைத்துள்ளதா? எதிர்க்கட்சி எம்பிக்களை கைது செய்வதாக மிரட்டுகிறார்கள்’’ என அவைத் தலைவரிடம் முறையிட்டார். இதனால் அவையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

The post அமைச்சர் ஸ்மிருதி இரானி மீது ஆ.ராசா புகார் எதிர்க்கட்சி எம்பிக்களை கைது செய்வதாக மிரட்டுகிறார்: மக்களவையில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : A. Raza ,minister ,Smriti Irani ,Lok ,Sabha ,New Delhi ,Union Minister ,Lok Sabha ,DMK ,Minister Smriti Irani ,Dinakaran ,
× RELATED மோடி சமூக நீதியைக் கடைபிடிக்காமல்...