×

ஊட்டி- கூடலூர் சாலையில் அகற்றப்படாத மரத்துண்டுகள்

ஊட்டி: ஊட்டி- கூடலூர் சாலையில் தலைக்குந்தா பகுதியில் வெட்டப்பட்டு சாலை ஓரங்களில் அகற்றப்படாமல் கிடக்கும் மரத்துண்டுகளால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் சூறாவளி காற்றுடன் கூடிய மழை பெய்தது. பலத்த காற்று காரணமாக ஊட்டி- கூடலூர் சாலையில் தலைகுந்தா, பைக்காரா மற்றும் சாண்டி நல்லா போன்ற பகுதிகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதித்தது.

இந்த மரங்களை தீயணைப்புத்துறை மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக அகற்றி போக்குவரத்து சீரமைப்பு செய்தனர். ஆனால் இந்த மரத்துண்டுகள் சாலை ஓரங்களில் இருந்து இன்னும் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் இச்சாலையில் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் அவ்வழித்தடங்களில் செல்லும் இருசக்கர வாகனங்களுக்கு விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த மரங்களை உடனே அகற்ற வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

The post ஊட்டி- கூடலூர் சாலையில் அகற்றப்படாத மரத்துண்டுகள் appeared first on Dinakaran.

Tags : Cuddalore Road ,Thalakunda ,Dinakaran ,
× RELATED பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள்,...