×

ஆர்பிஐ விதிகளை மீறி ரூபாய் நோட்டுகளை மாற்றியதாக பதிவான வழக்கில் இருந்து கனரா வங்கி மேலாளரை விடுவிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

சென்னை: ஆர்பிஐ விதிகளை மீறி ரூபாய் நோட்டுகளை மாற்றியதாக பதிவான வழக்கில் இருந்து கனரா வங்கி மேலாளரை விடுவிக்க ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. ரூ.500 நோட்டுகளை கொடுத்து புதிய ரூ.200 நோட்டுகளாக மாற்றியதாக கனரா வங்கியின் மேலாளர் தயாநிதி மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. வங்கி கிளையில் மாற்றாமல் பணப்பெட்டகம் மூலம் மாற்றியதற்கு வங்கி அதிகாரிகள் துணைபோனதாக சிபிஐ புகார் அளித்தது. வழக்கிலிருந்து விடுவிக்க அப்போதைய வேலூர் கனரா வங்கி மேலாளர் தயாநிதி, தாமோதரனின் உறவினர் ஸ்ரீனிவாசன் மனு தாக்கல் செய்திருந்தார். இருவரும் தாக்கல் செய்த மனுக்களை சிபிஐ நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

The post ஆர்பிஐ விதிகளை மீறி ரூபாய் நோட்டுகளை மாற்றியதாக பதிவான வழக்கில் இருந்து கனரா வங்கி மேலாளரை விடுவிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு appeared first on Dinakaran.

Tags : High Court ,Canara Bank ,RBI ,Chennai ,Dinakaran ,
× RELATED மஞ்சுவிரட்டு அனுமதிக்காக நீதிமன்றம்...