×

டாடா பஞ்ச் சிஎன்ஜி

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், டாடா பஞ்ச் சிஎன்ஜியை அறிமுகம் செய்துள்ளது. பியூர், அட்வெஞ்சர், அக்கம்ப்ளிஷ்டு என்ற மூன்று டிரிம்களில் 5 வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றில் சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் இன்ஜின் தேர்வுகளில் கிடைக்கிறது. இதில் 1.2 லிட்டர் 3 சிலிண்டர் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. பெட்ரோலில் இன்ஜின் அதிகபட்சமாக 86 எச்பி பவரையும், 113 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

சிஎன்ஜியில் அதிகபட்சமாக 73.4 எச்பி பவரையும், 103 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டது. துவக்க மாடலான டாடா பியூர் சிஎன்ஜி ஷோரூம் விலை சுமார் ரூ.7.1 லட்சம் எனவும், டாப் வேரியண்டான அக்கமப்ளிஷ்டு டாசில் எஸ் சுமார் ரூ.9.68 லட்சம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் வேரியண்டை பொறுத்தவரை, பியூர் வேரியண்ட் சுமார் ரூ.6 லட்சம் எனவும், டாப் வேரியண்டான அக்கம்ப்ளிஷ்டு டாசில் எஸ் சுமார் ரூ.8.65 லட்சம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சிஎன்ஜி காரின் புறத்தோற்றத்தில் மாற்றம் எதுவும் இல்லை. கூடுதலாக ‘ஐசிஎன்ஜி’ என்ற பேட்ச் இடம் பெற்றுள்ளது. 7.10 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. ஏற்கெனவே டியாகோ, டிகோர், அல்ட்ராஸ் ஆகிய சிஎன்ஜி கார்களை டாடா மோட்டார்ஸ் சந்தைப்படுத்தியுள்ளது. இந்த வரிசையில் பஞ்ச் சிஎன்ஜி 4வது காராகும்.

The post டாடா பஞ்ச் சிஎன்ஜி appeared first on Dinakaran.

Tags : Tata ,Tata Motors ,Dinakaran ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் 28ம் தேதி...