×

டேஸ்ட்டி ரெசிபிகள்

நெல்லி ரசம்

தேவையான பொருட்கள்:

முழு நெல்லிக்காய் – 10, வெற்றிலை – 20,
கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை – தலா ஒரு கைப்பிடி,
காய்ந்த மிளகாய் – 4,
பூண்டு – 6 பல்,
வால் மிளகு, சீரகம் – தலா ஒரு
டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்,
நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:

நெல்லிக்காயை விதை நீக்கி சாறு எடுக்கவும். கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, வெற்றிலை மூன்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வெறும் சட்டியில் காய்ந்த மிளகாயை கிள்ளி போட்டு, பொடியாக நறுக்கிய பூண்டு, ஒன்றிரண்டாகத் தட்டிய வால்மிளகு, சீரகம் ஆகியவற்றை போட்டு இளம் சிவப்பாக வறுக்கவும். பின்னர், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, வெற்றிலை, கொத்தமல்லி இலையை அதில் போட்டு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும் விழுதாக அரைத்துக்கொள்ளவும். ஒரு சட்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி, அரைத்து வைத்துள்ள விழுதைப் போட்டு வதக்கவும். அதில் நெல்லிக்காய் சாறு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். அடுப்பை மிதமாக எரியவிடவும். கொதிக்கும் பக்குவம் வந்ததும், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்கவிடாமல் கீழே இறக்கவும்.

ஆப்பிள் துவரம்பருப்பு ரசம்

தேவையானவை:

பொடியாக நறுக்கிய ஆப்பிள் – ஒரு கப்,
வேக வைத்த துவரம்பருப்பு (நன்றாக மசித்துக் கொள்ளவும்) – அரை கப்,
தக்காளி துண்டுகள் – கால் கப்,
கடுகு, சீரகம் – தலா அரை டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்,
கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

வறுத்து அரைக்க:

துவரம்பருப்பு – இரண்டு டீஸ்பூன்,
மிளகு – ஒரு டீஸ்பூன்,
தனியா – 4 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 2.

செய்முறை:

வறுத்து அரைக்கக் கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும். ஆப்பிள் துண்டுகளை 3 கப் தண்ணீர் விட்டு வேகவிடவும். பிறகு, இதில் தக்காளி துண்டுகள், மசித்த பருப்பு, வறுத்து அரைத்த விழுது, மஞ்சள்தூள் உப்பு சேர்த்து, இரண்டு கொதி விட்டு இறக்கவும். எண்ணெயில் கடுகு, சீரகம் தாளித்துச் சேர்க்கவும். கொத்தமல்லி, கறிவேப்பிலை கிள்ளிப் போடவும். வேக வைத்து கரைத்த பருப்புத் தண்ணீர், தக்காளி சாறு, அரைத்த பொடி, உப்பு பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து பொங்கி வரும்வரை கொதிக்கவிட்டு, கீழே இறக்கவும். நெய்யில் கடுகு தாளித்துச் சேர்த்து, கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவவும்.

தூதுவளை ரசம்

தேவையான பொருட்கள்:

தூதுவளை 2 கைப்பிடி,
சின்ன வெங்காயம் 10,
தக்காளி 2,
பச்சை மிளகாய் 3,
காய்ந்த மிளகாய் 2,
பூண்டு 15 பல்,
மிளகு ஒரு ஸ்பூன்,
சீரகம் ஒரு ஸ்பூன்,
மஞ்சள் தூள் அரை ஸ்பூன்,
புளி எலுமிச்சை அளவு,
உப்பு ஒரு ஸ்பூன்,
எண்ணெய் 3 ஸ்பூன்,
கடுகு அரை ஸ்பூன்,
உளுத்தம் பருப்பு அரை ஸ்பூன்,
கருவேப்பிலை ஒரு கொத்து,
கொத்தமல்லித்தழை ஒரு கொத்து.

செய்முறை:

முதலில் எலுமிச்சம்பழ அளவு புளியை தண்ணீர் ஊற்றி ஊறவைத்து, நன்றாகக் கரைத்து, புளித்தண்ணீர் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு சின்ன வெங்காயம் மற்றும் 15 பல் பூண்டை தோலுரித்து வைத்துக் கொள்ள வேண்டும். தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். அதன் பின்னர் இரண்டு கைப்பிடி தூதுவளையை தனியாக கிள்ளிக் கொண்டு, தண்ணீரில் அலசி வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு ஸ்பூன் மிளகு, ஒரு ஸ்பூன் சீரகம், 15 பல் பூண்டு, 3 பச்சை மிளகாய் மற்றும் 2 கைப்பிடி தூதுவளையை சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு மற்றும் 2 காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டு தாளிக்க வேண்டும். அதன்பிறகு சின்ன வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் நறுக்கிய தக்காளியையும் சேர்த்து லேசாக வதக்கி விட்டு, அரைத்து வைத்துள்ள தூதுவளை விழுதை இவற்றுடன் சேர்த்து வதக்கவிட வேண்டும். இவை அனைத்தும் நன்றாக வதங்கி எண்ணெய் பிரிந்து வந்ததும் கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீரை சேர்த்து கொதிக்க மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விட்டு இறக்கினால் தூதுவளை ரசம் தயார்.

திராட்சை – தக்காளி ரசம்

தேவையானவை:

நறுக்கிய தக்காளி – கால் கப்,
பச்சை திராட்சை – கால் கப்,
மிளகு – அரை டீஸ்பூன்,
சீரகம் – ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 2,
துவரம்பருப்பு,
தனியா – தலா ஒரு டீஸ்பூன்,
பெருங்காயத் தூள் – ஒரு டீஸ்பூன்,
துவரம்பருப்பு வேகவைத்த தண்ணீர் – ஒன்றரை கப்,
கறிவேப்பிலை, கடுகு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு,
நெய் – ஒரு டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

வெறும் கடாயில் மிளகு, சீரகம், மிளகாய், தனியா துவரம்பருப்பு, பெருங்காயத்தூளை வறுத்து பொடிக்கவும். தக்காளி, திராட்சை இரண்டையும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். இந்தச் சாறுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து மஞ்சள்தூள், உப்பு, நெய், வறுத்த பொடி போட்டு நன்றாக கொதிக்க விடவும். இதில் நறுக்கிய கொத்தமல்லியை சேர்க்கவும். பிறகு துவரம்பருப்பு வேகவைத்த தண்ணீரை சேர்த்து நுரை வரும் வரை கொதிக்க விடவும். ரசம் பொங்கி வரும்போது இறக்கி வைத்து நெய்யில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும். ரசத்தை இறக்கும்போது சிறிது எலுமிச்சைச் சாறும், இரண்டு கீறிய பச்சை மிளகாய்களையும் சேர்த்தால் சுவை கூடும்.

The post டேஸ்ட்டி ரெசிபிகள் appeared first on Dinakaran.

Tags : Nelli ,
× RELATED உதவியாளர்களிடம் ரூ.4 கோடி பறிமுதல்...