×

ஒரே போட்டோ மூலம் 658 சிம்கார்டு வாங்கிய வாலிபர்

விஜயவாடா: ஆந்திர மாநிலம், விஜயவாடா மாவட்டம் சத்திய நாராயணபுரத்தை சேர்ந்தவர் நவீன். இவர் ஒரே போட்டோவை வைத்து போலி ஆவணங்கள் மூலம் 658 சிம் கார்டுகளை வாங்கி உள்ளார். நவீன் ஒரே போட்டோ மூலம் 658 சிம் கார்டு வாங்கியது தொலை தொடர்பு துறை அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. இதுகுறித்து தொலை தொடர்பு துறை செயற்கை நுண்ணறிவு பிரிவு மற்றும் முக அங்கீகாரம் செய்யும் மென்பொருள் மூலம் சிம்கார்டு மோசடியை கண்டறிந்தனர். சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில் நவீன் போலி ஆவணங்களை பயன்படுத்தி பல்வேறு இடங்களில் சிம் கார்டுகளை வாங்கியது தெரியவந்தது.

இதேபோல் வேறு ஒரு வாலிபர் அஜித் சிங் நகர், விஷ்னா பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் போலி ஆவணங்கள் மூலம் 150 சிம் கார்டுகள் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. போலி ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட சிம்கார்டுகள் அடையாளம் கண்டு சிம் கார்டுகளை செயலிழக்க வைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். போலி ஆவணங்கள் மூலம் வாங்கப்பட்ட சிம்கார்டுகள் சமூக விரோதிகள் மற்றும் தீவிரவாதிகளின் கைகளில் சிக்கி இருந்தால் பல்வேறு பின் விளைவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து போலி ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட சிம்கார்டுகள் தற்போது எங்கே யாரிடம் உள்ளது, யார் சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகிறார்கள் என விசாரணை நடத்த உள்ளதாகவும் தெரிவித்தனர். ஒரே போட்டோ மூலம் வாலிபர் ஒருவர் 658 சிம் கார்டுகள் வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post ஒரே போட்டோ மூலம் 658 சிம்கார்டு வாங்கிய வாலிபர் appeared first on Dinakaran.

Tags : Walliber ,Vijayawada ,Navin ,Chattiya Narayanapuram, Andhra State, ,Vijayawada District ,Volifer ,
× RELATED விஜயவாடாவில் மருத்துவக் கிடங்கில்...