×

மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ திரவ இயக்க உந்தும் வளாகத்தில் ககன்யான் என்ஜின் சோதனை வெற்றி

நெல்லை: மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ திரவ இயக்க உந்தும் வளாகத்தில் ககன்யான் என்ஜின் சோதனை வெற்றி பெற்றது. மொத்தமாக 670 விநாடிகள் மேற்கொள்ளப்பட்ட சோதனை வெற்றி பெற்றது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி மீண்டும் பூமிக்கு அழைத்து வரும் ககன்யான் திட்டத்தில் சோதனை நடத்தப்பட்டது.

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தில், விண்கலத்திற்கான இன்ஜின் சோதனை வெற்றி பெற்றதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. விண்ணில் செலுத்தப்பட இருக்கும் விண்கலத்தின் திரவ இஞ்சின் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டிசம்பர் 2024ல் இந்தியாவிலிருந்து முதன்முறையாக மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் சோதனை நடத்தப்படும் . அதற்கான வெப்ப பரிசோதனை நடைபெற்றது. 670 வினாடிகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதற்குரிய கவுன்ட்டவுன் தொடங்கி பரிசோதிக்கப்பட்ட நிலையில், வெப்ப பரிசோதனை வெற்றி பெற்றதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நெல்லை மாவட்டம் காவல்கிணறு மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் வகையில் ‘ககன்யான்’ திட்டத்துக்கு தேவையான ராக்கெட் என்ஜின் பரிசோதனை பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 5 கட்டமாக மொத்தம் 2,750 வினாடிகள் என்ஜின் சோதனை வெற்றிகரமாக நடந்தது. இதில் 5 எண்ணிக்கையிலான 440 என்.எல்.ஏ.எம். என்ஜின்களும், 8 எண்ணிக்கையிலான 100 என்.ஆர்.சி.எஸ். த்ரஸ்டர்களும் ஈடுபடுத்தப்பட்டன.இந்த நிலையில் ககன்யான் திட்ட ராக்கெட் என்ஜினின் சர்வீஸ் மாட்யூல் புரோபல்சன் சிஸ்டத்தின் ஒருங்கிணைந்த செயல்திறன் குறித்து 670 வினாடிகள் என்ஜினை இயக்கி வெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்டது.

 

The post மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ திரவ இயக்க உந்தும் வளாகத்தில் ககன்யான் என்ஜின் சோதனை வெற்றி appeared first on Dinakaran.

Tags : ISRO Liquid ,Propulsion ,Complex ,Mahendragiri ,Nellie ,ISRO Fluid Propulsion Complex ,Kaganyan ,ISRO Fluid Propulsion ,Dinakaran ,
× RELATED பொதுமக்கள் அதிக அளவில் வந்து செல்லும்...