×

அழகிய அலியா கட்

‘அலியா கட் குர்தா, அலியா கட் சல்வார்… சமீபத்தில் இன்ஸ்டாகிராம் ஃபேஷன் விற்பனை கணக்குகள், சமூக வலைதள ஃபேஷன் விரும்பிகள் என எங்கும் டிரெண்டிங் இந்த அலியா கட் சல்வார்கள்தான். மேல் மார்பகப் பகுதியில் ஒரு ‘வி’ கட், இடைப்பகுதியில் ஹை வெய்ஸ்ட் கட் என இப்போது அதிகம் டிரெண்டிங்கில் இருக்கும் சல்வார்கள் இவைதான். அதே போல் இதன் விலையும் கூட சற்றே அதிகம் ஏன்? அலியா கட் சல்வார்கள் திடீர் டிரெண்டிங்கில் வர என்ன காரணம், மேலும் ஃபேஷன் சார்ந்த பல தகவல்களை பேசினார் செலிபிரிட்டி ஃபேஷன் டிசைனர் மற்றும் பயிற்சியாளர் நந்தா.

‘இந்தக் குர்திகளின் கட் பொதுவாகவே முன்பக்கம் சற்று மேலே உயர்ந்து, பின்பக்கம் சற்றே கீழே இறங்கி வரும், இதுதான் இதனுடைய ஸ்பெஷல். சென்ற வருடம் அலியா பட் இந்த கட் குர்திகளில் நிகழ்ச்சிகளில் அதிகம் தென்பட்டார். குறிப்பா அவர் கருவுற்ற நேரம் என்கிறதால் இந்த டைப் குர்தாக்கள் அவர் வயிற்றை நல்லா மறைச்சுக் காண்பிச்சது. மேலும் ஒல்லியாகவும் உடலைக் காட்டக் கூடிய வகை குர்தாக்கள் இவை. இந்த அலியா கட் இந்தப் பெயர் இப்போதான் டிரெண்டிங் பெயர். ஆனால் முன்பு வெறும் குர்தாதான். பொதுவாகவே உடலை மறைத்தாலும் நம் அளவை குறைத்து, உயரமாகக் காட்ற எந்த உடையும் காலம் தாண்டி நிற்கும். அப்படி ஃபேஷன் உலகில் நிற்கும் டிசைன் தான் இந்த அலியா கட்’ எப்படி டிசைன் செய்ய வேண்டும் தொடர்ந்தார் நந்தா.

‘பொதுவாகவே அனார்கலி அதீத டிரெண்டானதுக்குக் காரணம் உடல் முழுக்க மறைச்சாலும் கூட அழகாவும், கச்சிதமாகவும் காட்டும். அதே போல போட்டுக்கொள்ள வசதியா இருக்கும். அப்படித்தான் அலியா கட் குர்தாக்கள் போட்டுக்க வசதியா இருக்கும். மேலும் மெட்டீரியலும் கூட காட்டன், லினென், ஜியார்ஜெட், இப்படியான லைட் வெயிட், அல்லது கனமில்லாத மெட்டீரியல்கள்லதான் கொடுப்பாங்க. இந்த அலியா கட் பொருத்தவரை குர்தாக்களா ஜீன் பாட்டம்கள் கூட மேட்ச் செய்துக்கலாம், பாட்டம், துப்பட்டா, இப்படி செட்டா சல்வார்களாகவும் மேட்ச் செய்துக்கலாம். இல்லை கீழே நீளமான ஸ்கர்ட் அல்லது பலாஸோ இப்படி எதன் கூடவும் இந்த குர்தாக்கள் பொருந்தும். ஜீன்ஸ் போட்டு, ஒரு ஸ்டோல் மேட்ச் செய்தா செமி வெஸ்டர்ன் அல்லது இண்டோ-வெஸ்டர்ன் லுக் கொடுத்திடும். ஆபீஸ், நண்பர்கள் கூட சந்திப்பு, கேஷுவல் நிகழ்வுகளுக்கு பயன்படுத்தலாம். நேர் கட் குர்தாக்களாதான் இந்த குர்தாக்கள் டிசைன் செய்வாங்க. மேலும் அந்த மார்பு பகுதியை முழுமையா மறைக்காம, பாதிக்கு பாதி மேலே ஒரு வி கட் கொடுக்கும் போது மார்புச் சுற்றளவும் குறைவா காண்பிச்சிடும். மேலும் மேலே இருந்து நேரான கட்டா வந்து, பின்பக்கம் தையல் இறங்கறதால் இடைப்பகுதியும் சின்னதா காட்டும். மேலும் மார்புப் பகுதிகள்ல எம்பிராய்டரி, ஜமிக்கி வேலைகள், பட்டைகள் கொடுத்து அதிலே ஆரி வேலைப்பாடுகள் இப்படி கூட டிசைன் செய்துக்கும் போது கிராண்ட் உடையாவும் தென்படும்’ எல்லா வகையான சல்வார்கள் போலவும் இதுவும் ஒரு சல்வார்தான், கொடுக்கக் கூடிய கட்தான் இந்த சல்வார்களை சிறப்பாகக் காட்டும்
என்கிறார் நந்தா.

‘எப்படி அனார்கலி, சராரா, சகாரா, உடைகள் அதனுடைய டிசைனிங்கால் பிரபலமானதோ அதே வகைதான். போட்டுக்க வசதியா இருக்கணும், அதே சமயம் நான் அழகாவும், கொஞ்சம் உடல் வளைவுகளும் பளிச்சென தெரியணும் அதுக்கு அலியா கட் நல்ல சாய்ஸ். இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், இலங்கை ஃபேஷன்களில்தான் இந்த குர்தாக்கள், குர்திக்கள் படு ஃபேமஸ். குறிப்பா உத்திரபிரதேசத்தில் கலாச்சார உடை. இடையிலே அலியா பட் நிறைய நிகழ்ச்சிகள்ல போட ஆரம்பிக்கவும், இந்த சல்வார்களுக்கே அவங்க பெயரை வெச்சிட்டாங்க. எப்படி பல்லாயிரம் வருட பழமையான மஸ்தாணி உடைகள் தீபிகா மூலமா பிரபலமானதோ அப்படி பழைய ஸ்டைல் சல்வார் இப்போ அலியா பட் மூலமா பிரபலம் ஆகிடுச்சு. பொதுவாகவே பெண்களுடைய பெண்மையை கொஞ்சம் ஹைலைட் செய்கிற உடைகளும், அடுத்து அவங்களுக்கு அதீத வசதியான உடையாகவும் இருக்கும் ஃபேஷன் அப்டேட்கள் காலம்தாண்டி நிற்கும். அப்படிதான் நம்ம பெண்கள் ஃபேஷன் உலகத்திலே பலாஸோ பாட்டம்களுக்குத் தனி இடம் கொடுத்திருக்காங்க. அப்படித்தான் இந்த அலியா கட் சல்வார்கள், குர்திகளும்’ சாதாரண காட்டன் துணியில் வடிவமைக்கப்பட்டாலும் கூட இந்த ஆல்யா கட் சல்வார்கள், குர்தாக்களுக்கு ஏன் இவ்வளவு விலை கொடுக்க வேண்டியுள்ளது.

‘போட்டுக்கொள்ள வசதியாக இருந்தா அந்த உடை பெண்களுடைய உடல் வடிவத்தை ஹைலைட் செய்யாது, அதே சமயம் உடல் அளவுகளை ஹைலைட் செய்து, செக்ஸியான லுக் கொடுத்தால் அது அணிய வசதியா இருக்காது. நிச்சயம் உடலை இறுக்கிப் பிடிக்கும், அல்லது உறுத்தும். ஆனால் ஒரு டிசைன் ரெண்டுமே கொடுக்கும் பட்சத்தில் நிச்சயம் விலை அதிகமாதானே சொல்வாங்க. போலவே அதிகம் பேஸ்டல் கலர்களும், பிரைட் கலர்களும் இந்த சல்வார்கள்ல பார்க்க முடியுது. காட்டன், லினென், கைத்தறி, ஜியார்ஜெட் இந்த மெட்டீரியல்கள் எல்லாமே நம் இந்திய வெப்ப மண்ணுக்கு ஏத்த மெட்டீரியல்கள் என்கிறதால் இந்த சல்வார்கள், குர்தாக்களுக்கு அதீத மவுசு. வாங்குவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் போது நிச்சயம் இந்த சல்வார்களும் விலை குறையும், எப்படி பலாஸோ, சஹாரா, ஷராரா உடைகள் விலை குறைவா ஆன்லைன்ல வந்ததோ அதே மாதிரி இந்த உடைகளும் விலை குறைவா ஆன்லைன்லயும் கிடைக்கும். இப்பவும் ஆன்லைன் தளங்கள்ல இருக்கு, ஆனாலும் இன்னமும் ரூ.1000க்கே வராமல் குறைஞ்சது ரூ.1500ல் நிற்கிறது. வாங்குவோர் எண்ணிக்கையும், அதற்கான டிசைன்களும் அதிகரிக்கும் போது அதனாலும் விலை குறையும். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அதீத வெப்பம் கொண்ட நிலங்கள். அங்கே கிராண்ட் உடைகளாகவும் இருக்கணும், அதே சமயம் உடலை உறுத்தாத உடைகளா இருக்கணும். எல்லாத்துக்கும் மேலே இஸ்லாமிய சம்பிரதாயப்படி உடை உடல் முழுக்க மறைத்த வண்ணம் இருக்க வேண்டும் என்ற நிலையில் இந்த உடைகள் அங்கேயும் பிரபலம். அதிலும் 40+ வயதிலிருக்கும் நிறைய பெண்கள் இந்த உடைகளை அதிகம் விரும்பி அணியறாங்க’.
– ஷாலினி நியூட்டன்

The post அழகிய அலியா கட் appeared first on Dinakaran.

Tags : Alia Cut ,Kurta ,Salwar ,Instagram ,
× RELATED ஜோதிகா சல்வார், நயன்தாரா குர்தா,பூமிகா அனார்கலி… : இது டிரெண்டிங் ஸ்டோரி