×

நாங்கள் நீதிபதியாக இல்லை என்றால் எங்களது வார்த்தைகள் யாரையும் கட்டுப்படுத்தாது!: ரஞ்சன் கோகாய் பேசியதற்கு சந்திரசூட் விளக்கம்

புதுடெல்லி: நாங்கள் நீதிபதியாக இல்லை என்றால், எங்களது வார்த்தைகள் யாரையும் கட்டுப்படுத்தாது என்று ரஞ்சன் கோகாய் பேசிய கருத்துக்கு சந்திர சூட் விளக்கம் கொடுத்தார். உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியும், மாநிலங்களவை எம்பியுமான ரஞ்சன் கோகாய், நேற்று முன்தினம் அவை நடவடிக்கையில் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், ‘கேசவானந்த பாரதி வழக்கு தீர்ப்பில், அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கையை உச்ச நீதிமன்றம் வகுத்தது.

அதாவது ஜனநாயகம், மதச்சார்பின்மை, கூட்டாட்சி தத்துவம், சட்டத்தின் ஆட்சி போன்ற சில அடிப்படை அம்சங்களை நாடாளுமன்றத்தால் திருத்த முடியாது என்று கூறியது. முன்னாள் சொலிசிட்டர் ஜெனரலின் புத்தகத்தைப் படித்திருக்கிறேன். அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கையானது, நீதித்துறையை அடிப்படையைக் கொண்டுள்ளது என்று நான் கருதுகிறேன். இதற்கு மேல் நான் எதுவும் சொல்ல மாட்டேன்’ என்று கூறினார்.

இந்நிலையில் ஜம்மு – காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் முகமது அப்கர் லோன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ‘மாநிலங்களவையில் பங்கேற்ற முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய், ‘அரசியல் அமைப்பின் அடிப்படை கோட்பாடுகளானது கேள்விக்குறியது என்று உங்களது சக நீதிபதி தெரிவித்துள்ளார்’ என்றார்.

அதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி சந்திரசூட், ‘சக நீதிபதி குறித்து நீங்கள் (கபில் சிபல்) குறிப்பிடும்போது, தற்போது பணியில் இருக்கும் சக நீதிபதியை தான் குறிப்பிட்டு கூற வேண்டும். நீதிபதி பதவியில் இருந்து ஒருவர் சென்றுவிட்டால், அவர் எதைச் சொன்னாலும் அது அவரது கருத்து மட்டுமே தவிர, அது யாரையும் கட்டுப்படுத்தாது’ என்றார். அப்போது சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா குறுக்கிட்டு, ‘நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படாமல் இருப்பது போல், நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் விசயங்களை நீதிமன்றத்தில் விவாதிக்க முடியாது’ என்றார்.

The post நாங்கள் நீதிபதியாக இல்லை என்றால் எங்களது வார்த்தைகள் யாரையும் கட்டுப்படுத்தாது!: ரஞ்சன் கோகாய் பேசியதற்கு சந்திரசூட் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Chandrachut ,Ranjan Gogai ,New Delhi ,Chandrachud ,
× RELATED காவலில் இருக்கும் குற்றவாளிகள்...